உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

35

அவர்கள் தம் அறிக்கையில் இறுதியில் “இந்த ஆண்டு முழுவதும் அமைதி நிலவியிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் நடத்திய கள்ளுக்கடை மறியலில் ஒரு சப் இன்ஸ்பெக்டரையும் ஐந்து போலீசாரையும் இவர்கள் 3,000 பேர்கள் தடுத்து வளைத்துக் கொண்டு படுகாயத்திற்கு ஆளாக்கினார்கள் என்பது இந்த “ஹிஸ்டரி ஆப் தி மதறாஸ் போலீஸ்” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட காரியங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் இறங்கியது கிடையாது. திண்டிவனத்தில் இன்ஸ்பெக்டரையும், போலீஸ் படையையும் கருணையற்ற முறையில் மறியல் கும்பல் அடித்து நொறுக்கியது. அதுவும், இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மதுரையிலும், போடியிலும் மறியலில் போலீசார் தாக்கப்பட்டனர். "வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கத்தையெட்டி தலைவர்கள் கைது செய்யப்பட்டவுடன் சென்னையில் சூளையில் உள்ள கடைத் தெருக்களெல்லாம் தீ வைக்கப்பட்டது. உயர்நீதி மன்ற கட்டடத்திற்குத் தீ இட முயற்சி நடைபெற்றது. தபால் பெட்டிகள் எல்லாம் தகனம் செய்யப்பட்டன. வட ஆற்காடு மாவட்டத்தில் தந்திக்கம்பிகள் தொலைப்பேசிக் கம்பிகள் அறுக்கப்பட்டன. பணப்பாக்கத்தில் பி. டபிள்யூ. டி இன்ஸ்பெக்ஷன் பங்களா, வேலூரில் போலீஸ் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சூலூர் விமான நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. 22 மோட்டார் லாரிகள் சாம்பலாயின. தண்டரை ஆதிச்சனூர் ரயில் பாதையில் குட்ஸ் ட்ரெயின் கவிழ்க்கப்பட்டது. மதுரையில் நகர சபை "பைர் என்ஜின்", போலீஸ் பஸ்கள், தபால்

ஆபீஸ்கள், சானிட்டரி இன்ஸ்பெக்டர்ஸ் ஆபீஸ்,

திருவாடானையில் சப்-ட்ரஷரி, சப்-மாஜிட்ரேட் ஆபீஸ், டிப்டி தாசில்தார் ஆபீஸ் இவை தீக்கிரையாக்கப்பட்டன. நாட்டரசன் கோட்டையில் பள்ளிக்கூடம், ரெயில்வே ஸ்டேஷன் தீக்கரையாக்கப்பட்டன. திருவையாற்றில் சாலைகள் கெடுக்கப்பட்டு, பஸ்கள் தடுக்கப்பட்டன. தந்திக் கம்பிகள் வெட்டப்பட்டன. தண்டரை, ஆதிச்சனூர், வேலூர், பணப்பாக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், காலத்தி, திருச்சி, சிங்கநல்லூர், போத்தனூர், மதுரை, சேலம், மன்னார்குடி, திருவையாறு, குலசேகரப்பட்டிணம், தூத்துக்குடி இங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் தாக்கப்பட்டன, போலீஸார் தாக்கப்பட்டார்கள். இப்படிச்