36
காவல்துறை பற்றி
செய்தவர்கள்தான் போலீஸாரிடம் மக்களுக்கு ஏற்படவேண்டிய மரியதையைப் பற்றி கூறுகிறார்கள். தாயிடம் பிள்ளைக்கு ஏற்பட வேண்டிய பயம் போல் இருக்க வேண்டுமென்கிறார்கள். அந்தப் பயத்தைப் போக்கக் காரணமாக அவர்களே இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை நான் சாட்ட கடமைப்பட்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஒழுங்கை மீறி போலீஸாரை, அவர்கள் கடமையிலிருந்து நழுவச் செய்யும் எந்தக் காரியத்திலும் எந்த நேரத்திலும் ஈடுபட்டது கிடையாது. போலீஸாரைப் பாராட்டி இங்கு, 1962 ஜூலை என்று கருதுகிறேன், பேசிய நேத்தில் அப்போதிருந்த முதலமைச்சர் உயர்திருவாளர் காமராஜ் அவர்கள் குறுக்கிட்டு "போலீஸாரை மிரட்டாதீர்கள், நீங்கள் போலீஸாரை மிரட்டுகிறீர்கள், அப்படி மிரட்டிவிட்டு பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள் கூட்டங்களில் மிரட்டிப் பேசுகிறீர்கள்” என்று சொன்னார்கள். உடனே நான் பதில் சொன்னேன், மிரட்டக்கூடிய அதிகாரம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கு மிரட்டவேண்டிய அவசியமும் இல்லை. அப்படி நாங்கள் ஏதாவது மிரட்டியிருக்கிறோம் என்றால் ஏதாவது ஆதாரம் தர முடியுமா? என்று நான் கேட்டேன். உண்மையிலேயே மிரட்டிக் கொண்டிருப்பவர்கள்; யார் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன், பெப்ரவரி 25-ம் தேதி சென்னை கடற்கரையில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு சர்க்கார் சுருக்கெழுத்தாளர் சென்றிருக்கமாட்டார் என்று கருதுகிறேன். இதிலிருந்து யார் போலீஸை மிரட்டுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தமிழ் தேசியக்கட்சி இம்மூன்றும் சேர்ந்து தேசீய அணி என்று ஒரு அணி று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த தேசீய அணியின் சார்பாக நடத்தப்பட்டக் கூட்டத்தில், ஒரு நண்பர் என்ன பேசுகிறார் என்றால்
மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்கள், திரு. நஞ்சுண்டராவ் அவர்கள் பேசும்போது போலீஸ்காரன் என்று சொல்வது சரியல்ல என்று சொன்னார்கள். அதை நான் மரியாதையோடு, ஏற்றுக்கொள்கிறேன். - இந்த நிலைமையில், அந்த நண்பர் பேசுகிறார் . . . “ஏ போலீஸ்கார அடுத்த மூன்று எழுத்துக்களை நான் சொல்லவில்லை, அப்படியே விட்டு விடுகிறேன் - உனக்கு ஏன் காக்கிச் சட்டை, உனக்கு ஏன் சிவப்பு தொப்பி, உனக்கு ஏன் பூட்ஸ், உனக்கு ஏன் கால்சட்டை, இத்தனையும் கழற்றி கொடுத்து
.