கலைஞரின் சட்டமன்ற உரைகள்
379
முழுவதும் 922 வழக்குகளிலே கன்விக்ஷன் வாங்கி கொடுத்த காவல்துறை இந்தியா முழுமையும் 922 கொலை வழக்குகளிலே கன்விக்ஷன் வாங்கித் தந்தது; அந்த 922-ல் 707 வழக்குகளில் தமிழ்நாட்டில்தான் கன்விக்க்ஷன் வாங்கித் தரப்பட்டது என்று இந்த பெரிய புத்தகத்தில் மிகப் பெருமையோடு அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலே உள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை விரிவாக விவரிக்கின்ற இந்த அறிக்கையில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் பீகார், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலே சட்டம் ஒழுங்கினுடைய தன்மை மிகக் கடுமையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு விட்டு இதனைச் சொல்கிறார்கள்.
அ
அது மாத்திரம் அல்ல, அதே அறிக்கையில் ஜாதிக் கலவரத்தை அவர்கள் ஆராய்ந்து இருக்கின்றார்கள். அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைச் சொல்லும்போது 1985-ஆம் ஆண்டு 555 நிகழ்ச்சிகள், 332 பேர் உயிர் இழப்பு; 1986-ல் 764 நிகழ்ச்சிகள், 418 பேர் உயிர் இழப்பு; 1987-ல் 911 நிகழ்ச்சிகள், 383 பேர் உயிர் இழப்பு; 1988-ல் 720 நிகழ்ச்சிகள், 259 பேர் உயிர் இழப்பு; 1989-ல் 706 நிகழ்ச்சிகள், 802 உயிர் இழப்பு; என்கின்ற புள்ளிவிவரத்தைத் தந்து இருக்கிறார்கள். அந்தக் கால கட்டத்திலே தமிழ்நாட்டிலே போடியிலும் மற்றும் சில இடங்களிலும் ஒரு 29-லிருந்து 30, 35 உயிர் இழப்புகள். இந்தியா முழுவதும் பார்க்கிற நேரத்திலே ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு அமைதி கெட்டுள்ள ஒரு சூழ் நிலையோடு தமிழ்நாட்டை நாம் ஒப்பிட்டுப் பார்க்கிற நேரத்தில் குறைவானதுதான். ஆனாலும்கூட குறைவாக இருந்தாலும்கூட இது கூட இருக்கத் தேவையா என்கின்ற எண்ணம்தான் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது என்பதை நான் மறைத்திட விரும்பவில்லை.
1987-லேயிருந்து 1989-க்குள் மிகவும் குறைந்து விட்ட தாகவும் 922 பேர்களுக்குதான் கொலை வழக்கிலே தண்டனை இந்தியா முழுவதும் கிடைத்தது என்றும், அதில் 707 வழக்கு களிலே, கொலைகாரர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது தமிழ்நாடுதான் என்றும் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தில், இந்தியா முழுமையும் ஆண்டுதோறும் சுமார் 27 ஆயிரம் கொலை வழக்குகள் பதிவாகின்றன என்ற புள்ளி விவரத்தையும்