உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

காவல்துறை பற்றி

தந்திருக்கிறது. அந்த 27 ஆயிரம் கொலை வழக்குகளில் தமிழ் நாட்டில் சுமார் ஏறத்தாழ 1,400 கொலை வழக்குகள் ஆண்டு தோறும் பதிவாகின்றன. இந்தியா முழுமையும் 27 ஆயிரம் கொலை வழக்குகள்; அதிலே, தமிழ்நாட்டிலே ஆண்டுதோறும் சுமார் 1,400 கொலை வழக்குகள். இந்த 1,400 கொலை வழக்கு களில் 707 கொலை வழக்குகளில் குற்றாவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தந்தால் அது 50 சதவீதம். தமிழ்நாட்டிலே 50 சதவீதம் பேருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்கிறோம். 1,400 கொலை வழக்குகளில் 707 பேருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தைத் தவிர, இந்தியா விலுள்ள மற்ற இடங்களில் மீதமுள்ள 26 ஆயிரம் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது 215 பேருக்குத்தான். 1,400-ல் 707 பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது தமிழ்நாடு; ஆனால் 26 ஆயிரம் வழக்குகளில் 215 பேருக்குத்தான் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், இந்தியா முழுமைக்கும் அது 1 சதவீதமாக இருக்க, தமிழ்நாட்டிலே மாத்திரம் தண்டனை வாங்கித் தருகின்ற அந்தச் செயல் 50 சதவீதமாக ஆகியிருக்கிறது என்றால், அது தமிழ்நாட்டினுடைய காவல் துறையினருடைய முயற்சிக்கு, அவர்களுடைய ஆர்வத்திற்கு, அவர்களுடைய அவர்களுடைய கடமையுணர்வுக்கு எடுத்துக்காட்டு என்றுதான் சொல்ல வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி).

ஒரு

நம்முடைய நண்பர் நிக்லி அவர்கள் இங்கே பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். அதாவது 'இண்டியன் எக்ஸ்பிரஸ்'-ல் வந்துள்ள ஒரு கட்டுரையைக் குறித்து. அதிலே முக்கியமாக மூன்று கருத்துக்கள். அந்தப் பத்திரிகையிலே நேற்றையதினம் இடம் பெற்றுள்ளன. அவர்களும் ஆர்வத்தோடு காவல்துறை மானியத்திலே கலந்துகொண்டு சில கருத்துக்களைப் பத்திரிக்கை வாயிலாகத் தெரிவித்து இருக்கின்றார்கள். அதிலே அவர்கள் சொல்லுகிறார்கள். 1965-ஆம் ஆண்டு நேரடியாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இப்போது டி. எஸ். பி.-களாக உள்ளார்கள். அதுபோலவே 1976-லே தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இப்போது இன்ஸ்பெக்டர்களாக உள்ளார்கள். ஆக, நேரடியாக, உதவி ஆய்வாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், இன்ஸ்பெக்டராக 10 ஆண்டுகளும்; டி. எஸ். பி.-யாக

வி