கலைஞரின் சட்டமன்ற உரைகள்
391
தொழுகை முடிந்து சுமார் 500 பேர் வரை அதில் நடந்து வந்திருக் கிறார்கள். இதில் தப்பான எண்ணம் யாருக்கும் இல்லை - கலெக்டர் நடுநிலையோடு சொல்லியிருக்கிறார் - இதில் தப்பான எண்ணம் யாருக்கும் இல்லை. இரண்டு பேர் தரப்பிலும் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டி ருக்கிறது. இதனால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை” என்று அவர் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சமரச உணர்வோடு அந்த அறிக்கை இருக்கிறதே அல்லாமல் ஏதோ இஸ்லாமியப் பெருமக்களுக்கு விரோதமாக வெளியிடப்பட்ட அறிக்கையாகத் தெரியவில்லை. அவர் நிருபரிடத்திலே சொல்லிவிட்டு மேலும் சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு 3 மணிக்கு ஒரு தடவை தகவல் சொல்லிக் கொண்டிருக் கிறோம். இது பற்றிய அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டு, அங்கே சென்றிருந்த ஹோம் செக்ரட்டரியைச் சந்தித்து, அங்கே நடைபெற்ற சம்பவங்களை விவரித்து அவரிடத்திலே அளித்திருக்கிறார். எனவே இதில் அரசு அதிகாரிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கத் தேவையில்லை. குறிப்பிட்டு அப்படி நடந்துகொண்ட சம்பவங்கள் எனக்கு வழங்கப்படுமேயானால் நிச்சயமாக யாராகயிருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படுமென்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். பல குறைபாடுகள், பல்வேறு பிரச்சினைகள் மாண்புமிகு உறுப்பினர்களால் இந்த மன்றத்திலே காவல்துறை ஆய்வுரை குறித்து செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன
நம்முடைய திருமதி பாப்பா உமாநாத் அவர்கள் மிகுந்த ஆவேசத்தோடு நேற்றைய தினம் உரையாற்றி இருக்கிறார்கள். அவர்கள் என்னிடத்திலே கொடுக்கின்ற முறையீடுகள் எல்லாம் கேட்பாரற்றுப்போய் விடுவது போலவும் முதலமைச்சரே இப்படிப் பேசலாமா என்பது போலவும் நேற்றைக்கு ஆவேசமாகக் கேட்டார்கள். இப்போது என்னை எதிர்த்து வருகின்ற ஆவேசப் பேச்சுகளுக்கோ, கோபமான பேச்சுக்களுக்கோ நான் அதிகமாக வருத்தப்படுவதில்லை. ஏனென்றால் ஒரு 25, 30 ஆண்டுகளாக இதே இடத்திலிருந்து அப்படிக் கேட்டு, கேட்டு, வெளியிலே