உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

காவல்துறை பற்றி

அப்படிக் கேட்டு, கேட்டு உடம்பு மரத்துப் போய்விட்ட காரணத்தால், நான் அவ்வளவாக அதை எடுத்துக்கொள்ள வில்லை. ஆனாலும் திருமதி பாப்பா உமாநாத் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு பத்து காரியங்கள் சொன்னால் நான்கு காரியங்களிலே உடனடியாக அக்கறை செலுத்தப்பட்டு, அந்தக் காரியங்களை இந்த அரசின் சார்பில் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்.

திரு. ரா. சொக்கர் : பேரவைத் தலைவரவர்களே, 20, 30 ஆண்டுகளாக அந்தப் பேச்சைக் கேட்டு, கேட்டு, உடம்பு மரத்துப் போய்விட்டது என்று முதல்வரவர்கள் கூறினார்கள். மனம் பக்குவப்பட்டுவிட்டது என்றே நாங்கள் நினைக்கிறோம். ஆக அப்படி இருப்பதே பொருத்தமாக இருக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதற்குக் காரணம் இருக்கிறது. "செவி கைப்பச் சொற்பொறுத்தல்" என்பதுதான் அதற்கு விடை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 2 தினங் களுக்கு முன்புகூட அம்மையார் அவர்கள் அவருடைய ஜனநாயக மாதர் அணியை அழைத்துக் கொண்டு வந்து, என்னிடத்திலே வந்து, மண்டபத்திலே அமர்ந்து, என்னிடத்திலே பேச வேண்டுமென்று, சொன்னார்கள். அப்போது ஒரு கொலை வழக்கு பற்றிச் சொன்னார்கள். கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஒரு பெண். கமலா தேவி என்பது அவருடைய பெயர். அவர் கொலை செய்யப்பட்டது 9-6-1987. கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட அவருடைய கணவன் ரமேஷ், கமலா தேவியின் மைத்துனன் சுரேஷ், பணியாளர் குணாம்சிங் ஆகிய மூவர் மீதும், குற்றம் பதிவு செய்யப்பட்டு, 10-6-1987-லே விசாரணை தொடங்கிற்று. கீழ் கோர்ட்டில் 21-9-1989-ல் குற்றவாளி 2 மற்றும் குற்றவாளி 3 ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி 1, கணவர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

அதற்குப் பிறகு உயர்நீதிமன்றத்திலே மேல்முறையீடு குற்றவாளிகளாலும் அரசாலும் செய்யப்பட்டது. 1989-லே இந்த வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அரசு சும்மா இராமல் 2, 3,