உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

காவல்துறை பற்றி

மின் விசிறிகள் காவலர்களுக்கு வழங்கப்படும், அவர் களுடைய குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு 4,800 மின் விசிறிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் 22,669 மின் விசிறிகள் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. நிதி ஆதாரமும் குறைவாக இருக்கிறது. எனினும் இந்த ஆண்டு 22,669 மின் விசிறிகளில் 10,000 குடியிருப்புகளுக்கு 10,000 மின் விசிறிகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

-

-

காவலர் தேர்வு பற்றியெல்லாம் இங்கே பேசப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்குத் தேர்வு நடைபெற்றது. இந்த காவலர் பதவித் தேர்வில் முதல் நிலை காவலர் பதவிக்கு ஆண்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. இரண்டாம் நிலையில் இருந்தால் முதல் நிலைக்கு, பிறகு அவர்கள் பதவி உயர்த்தப்படுகிறார்கள். பெண் காவலர்களைத் தான் முதல் நிலை பதவிக்குத் தேர்வு செய்கிறார்கள். அப்படி தேர்வு செய்ய விண்ணப்பித்தவர்கள், ஆண்கள் இரண்டாம் நிலை காவலர்களுக்கு விண்ணப்பித்தவர்கள் 14,379 பேர். அதிலே எல்லாப் பரிசோதனையும், விசாரணையும் முடிந்து நியமனம் செய்யப்பட்டவர்கள் 6,862 பேர். அதைப்போல சிறப்புக் காவல் பணிக்கு தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அதற்கு விண்ணப் பித்தவர்கள் 2,490 பேர். அதிலே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் 1,210 பேர். கடந்த கால அரசில் இவர்களுடைய கல்வித் தகுதி எட்டாவது வகுப்பு வரை படித்து இருந்தால் போதும் என்று இருந்தது. ஆனால் இப்போது இந்த அரசு இனிமேல் இது போன்ற இரண்டாம் நிலை காவலர் பதவிக்கும் சிறப்புக் காவலர் பதவிக்கும், வளர்ச்சி அடைந்துள்ள கல்வி முறையைக் கணக்கிலே எடுத்துக் கொண்டு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கவேண்டும். பாஸோ, ஃபெயிலோ கவலை இல்லை. 10-ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து ஆணைபிறப்பித் திருக்கிறது. இந்த அடிப்படையில் இந்த ஆண்டு தமிழ்நாடு ஸ்பெஷல் போலீசுக்கு 2,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரி வித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).