உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

413

அதுமாத்திரமல்ல, இன்னொரு குறைபாடும் இங்கே கூறப்பட்டது. சிறப்புக் காவல் படையில் இருப்பவர்கள் அங்கேயே இருந்து விடுகிறார்கள் என்று. நான் சொன்னேனே டெல்லியிலே இருக்கிறார்கள் என்று. அவர்கள் நான் வந்து பார்த்தால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் இங்கே வருவதற்கே முடியவில்லை. சிறப்புக் காவல் படைக்கு என்று போகிறவர்கள் அங்கேயே தங்களுடைய பணிக்காலம் முடிகிற வரையிலே இருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது இயற்கை அடைகிறார்கள் இது நிலைமை. அதை மாற்றி, இனிமேல் சிறப்புக் காவல் படையிலே இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு சட்டம் - ஒழுங்கு காவல்துறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண் காவலர்கள் 1973 ஆம் ஆண்டு கழக ஆட்சியிலே தான் முதன் முதலாக தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்டார்கள். இங்கே சொன்னார்கள். மொத்தமாக, காவலர்கள் மீதே குறை சொல்லிக் கூட சில பேர் பேசினார்கள். ஒரு சிலர் இப்படி இருப்பார்கள் என்பதற்கு உதாரணங்களும் உண்டு. பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டபோது 21 பேர் நியமிக்கப்பட்டார்கள் அந்த 21 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருந் தார்கள். அப்போது அருள் அவர்கள் காவல்துறைத் தலைவர். நான் அண்ணா விருது வழங்குகிற விழாவிற்குச் சென்று இருந்தேன். அதிலே பெண் காவலர்கள் அணிவகுத்து வந்தார்கள். நான் அருள் அவர்களைப் பார்த்துக் கேட்டேன். என்ன 21 பேர் ஆயிற்றே, 20 பேர்தான் இருக்கிறார்கள்? என்று கேட்டேன். 'அது சார், ஒருவர் திருடிவிட்டார், அதனாலே விலக்கிவிட்டோம்', என்று சொன்னார். 'ஒரு பெண் காவலர் திருடி விட்டார், அதனாலே விலக்கிவிட்டோம்' என்று சொன்னார்.

ரு

அதனாலே காவல்துறையிலே இருந்தாலும்கூட, குறையுடை யவர்கள் இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம். அதற்காக அந்தக் காவல்துறையே தவறானது, பெண் காவலர்களை நியமிக்கக்கூடாது என்கிற முடிவிற்கு வரக்கூடாது. இருந்தாலும், அன்றைக்கு முதன் முதலாக தமிழகத்திலே தொடங்கப்பட்ட பெண் காவலர்