கலைஞரின் சட்டமன்ற உரைகள்
505
லிருந்து நம்மை மீட்டுக் கொள்வோமேயானால், இத்தகைய சூழ்நிலைகள் எல்லாம் ஏற்படாது என்பதை மாத்திரம் நான் மிகுந்த பணிவன்போடு எடுத்துகாட்ட விரும்புகிறேன்.
கொடுங்கையூர் பற்றி நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும் சொன்னார்கள். திரு. செல்லக் குமாரும் சொன்னார்; அநேகமாக, பேசிய அத்தனை பேரும் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்கள். திரு. சுப்பராயன் உட்பட அத்தனை பேரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். திரு. சுப்பராயன் அவர்கள்கூட ஒரு விபத்திலேயிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றிய காசிபாண்டியனைப்பற்றிக்கூடக் குறிப்பிட்டிருக் கின்றார்கள். காசிபாண்டியனுக்குக்கூட ஏதோ ஓரளவுக்கு சிறு தொகை வெகுமதியாக அளிக்கப்பட்டிருக்கின்றது. அது போதுமானது அல்ல என்ற குறை இருந்தாலும்கூட அது பரிசீலிக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொடுங்கையூரிலே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் கோவை துணை ஆய்வாளர் சந்திரசேகரன் சட்டம் ஒழுங்குப் பணியிலே திறமையாகப் பணி ஆற்றிய தன்மை, இவைகள் மாத்திரம் அல்ல, இவைகளைப் போலவே தீவிர வாதிகளை அடக்குவதிலும், மற்றும் தீவிரவாதிகளைக் கண்டு பிடிப்பதிலும், இதுபோன்ற சோதனைகளை, உயிருக்குத் துணிந்து சென்று தங்களுடைய திறமையைக் காட்டிய வகையிலும் தகுதி வாய்ந்தவர்கள் யார், யார் இருக்கின்றார்களோ அவர்களுடைய பெயர்கள் எல்லாம் பட்டியலிலே சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கும் விழாவிலே அவர்கள் எல்லாம் கௌரவிக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
திரு. தாமரைக்கனி வரவில்லை. இருந்தாலும் அவர் சொன்னது ரெக்கார்டில் இருக்கும். ஆகவே பதில் சொல்கின்றேன். போலிக் கையெழுத்திட்டு, போலி ஆவணங்கள் மூலமாகச் சொத்துரிமை கொண்டாடினார்கள் என்று சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகத்தை அத்தோடு இணைத்து இங்கே