506
காவல்துறை பற்றி
பேசினார். ஏ. கே. கே. சுந்தரம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் என்பது உண்மை. ஆனால் இதிலே சம்பந்தப்பட்டு இருப்பவர் யார் என்றால் அவருடைய தம்பி, மறைந்து விட்ட நடராஜன்; அவர் காங்கிரஸ் கட்சிக்காரர்; காங்கிரஸில் மிகுந்த தீவிரமாகப் பணியாற்றியவர். அவர் மறைந்து விட்டார். அவருடைய மனைவிக்கும், அவருடைய வளர்ப்பு மகளுக்கும் தகராறு. ஒரு உயில் தகராறு. அந்த உயிலிலே கையெழுத்திட்டு இருப்பது நடராஜன் தான் என்பது மகளுடைய வாதம். என் கணவர் கையெழுத்திடவில்லை என்பது அவருடைய துணைவியாரின் வாதம். இந்த வாதங்கள் இரண்டு கோர்ட்டுகளிலே நடந்து, சென்னை உயர்நீதிமன்றம் வரையிலே வந்து கடைசியாக திருவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலே நீதிபதி ஆவண நிபுணர்களின் கருத்தை ஏற்க இயலாது என்றும், இந்த ஆவணங்களை மீண்டும் பரிசோதனை செய்ய வேறு மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்புமாறும் 11-5-1998-ல் உத்தரவிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க சிவில் வழக்கு. இதிலே ஏதாவது முடிவு வந்து யாராவது குற்றம் சாட்டப்பட்டு, இன்னார் இதிலே தவறு செய்திருக்கிறார்கள் என்று வந்தால் அதற்குப் பிறகுதான் இது கிரிமினல் வழக்காக மாறி, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கிடையிலே இதிலே திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அமைச்சர்களையும் சேர்த்துப்பேசியது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பேசிய பிறகு அவர் பேசிய குறிப்பை என்னிடத்திலே கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்தேன். படித்துப் பார்த்தபோது எனக்கு ஒரு உண்மை விளங்கியது. முழு பேச்சையும் அதிலே எழுதி வைத்திருக்கிறார். அதைப் பார்த்தால், அந்தப் பேச்சில் ஏ. கே. கே. சுந்தரம் என்று வருகிறது; நடராஜன் என்று வருகிறது; அந்தப் பெண் பெயர் வருகிறது; மனைவி பெயர் எல்லாம் வருகிறது. அதிலே அடுத்து அவர் பேச இருப்பது, யார், யார் மீதோ நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று சொல்ல வந்தவர் முன்னாள் அமைச்சர்களை எல்லாம் கைது செய்தீர்கள்; முன்னாள் வாரியத் தலைவர்களை எல்லாம் கைது செய்தீர்கள் என்று சொல்ல வந்தவர், அதைப் படிப்பதற்குப் பதிலாக அமைச்சர்களுக்கு எல்லாம் இதிலே சம்பந்தம்