உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

507

இருக்கிறது என்று சொல்லிவிட்டார் என்று நான் கருதுகிறேன். ஏன் என்றால் அந்தப் பேச்சில் திடீர் என்று அமைச்சர்கள் பெயர் வருகிறது; ஆகவே, திரு. தாமரைக்கனி இதைத் தவறுதலாக படித்து இருப்பார் என்று கருதுகிறேன். இதிலே எந்த அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதையும், இது ஒரு சிவில் விவகாரம், இதிலே இந்த அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கின்றேன்.

டி

நம்முடைய திரு. ஐ. கணேசன் அவர்கள் திண் வனத்திலே டாக்டர் ராமதாஸ் மருத்துவமனை தாக்கப்பட்டது பற்றி சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொன்னார். விசாரிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையினுடைய மேலாளர் திருநாவுக்கரசு, அவர் கொடுத்த புகார்மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் குற்ற எண். 122/88-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ. பி. கோ. பிரிவு 147, 148, 448, 427, 323-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கு தீவிர புலன் விசாரணையிலே உள்ளது.

திரு. ஐ. கணேசன் இன்னொரு குற்றச்சாட்டைச் சொன்னார். சேலத்திலே மதுபானக் கடைகளை ஏலம் விட்டதில் தவறுகள் நடந்ததாகக் குறிப்பிட்டார். சேலத்திலே மொத்தம் 161 கடைகள் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டன. அவற்றினுடைய மொத்த குறுமத் தொகை - குறுமத் தொகை என்றால் Upset price ரூ. 8.04 கோடியாகும். ஆனால், இந்த Upset price-க்கு மாறாக ஏலத்திலே கிடைத்த மொத்தத் தொகை ரூபாய் 17 கோடி ரூ. 17.03 கோடி கிடைத்தது. இது குறுமத் தொகையைவிட குறுமத் தொகை என்பது ரொம்பத் தூய தமிழ். அதை Upset price எனலாம் அந்த Upset price-க்கு மேலே கிடைத்தது எவ்வளவு என்றால் 112 சதவிகிதம் அதிகம் கிடைத்திருக்கிறது. அதைத்தான் நம்முடைய திரு. ஐ. கணேசன் குறையாகச் சொன்னார்.

-

3

குறுமத் தொகை என்பது சென்ற 3 ஆண்டுகளில் கிடைத்த உரிமத் தொகையின் அடிப்படையிலேதான் நிர்ணயிக்