உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

கடை

காவல்துறை பற்றி

கப்படுகிறது. மிக அதிக அளவிலே இருந்தது. ஆனால் அதைவிட மிகக்கூடுதலாக, சேலம் மாவட்டத்தில் ஏலத்தில் தொகை கிடைத்திருப்பது மேலே தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து தெரியும் என்றே நான் என்றே நான் நம்புகின்றேன். அரசினுடைய அறிவுரைகளின்படி சென்ற ஆண்டு கிடைத்த உரிமைத் தொகைகளைவிட குறைவாகக் கிடைத்திருந்தாலோ அல்லது டயின் விற்பனையிலே 10 சதவிகிதத்திற்குக் குறைவாகக் கிடைத்திருந்தாலோ, அந்தக் கடைகளை மறு ஏலத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்பது அரசின் கொள்கை அந்த அடிப்படையில் அந்த மாவட்டத்தில் 23 கடைகள் மறு ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இந்த 23 கடைகளுடைய குறுமத் தொகை 87 இலட்சம் ரூபாய். அதற்கு மாறாக ரூ. 1.31 கோடி முதலில் கிடைத்தது. முதல் ஏலத்தில் அந்தக் கடைகளின் வாயிலாகக் கிடைத்த தொகை ரூ. 1.31 கோடி. மறுபடியும் ஏலம் விட்டதிலே கிடைத்த தொகை ரூ 1.81 கோடி என்பதையும்

தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனவே, எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் கடைகள் மறு ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அரசாங்கத்தினுடைய இந்தச் சீரிய கொள்கையால், அன்றைக்கு திருநாவுக்கரசு சொன்னார்கள். தனக்கு நன்றிகூற வேண்டுமென்று. அவருக்கு நன்றிகூற வேண்டுமென்றால், ரூ. 750 கோடி வந்திருக்க வேண்டுமென்று திரு. கணேசன் சொன்னார். நம்முடைய ஞானசேகரன் 'நானாக இருந்தால் ரூ. 1.000 கோடி இந்த ஏலத்திலே சம்பாதித்திருப்பேன்' என்று சொன்னார். (குறுக்கீடு).

திரு. சி. ஞானசேகரன் : அரசுக்கு என்று சொன்னேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதுதான் ரூ. 1,000 கோடி அல்ல, ரூ. 2,000 கோடி அல்ல, அது ரூ. 250 கோடியாக இருந்ததை ரூ.500 கோடியாகக் கொண்டு வந்தார்கள் என்பதற்காக ஒரு பாராட்டு கிடையாது. (மேசையைத் தட்டும் ஒலி). அவர் ரூ. 750 கோடி என்கிறார்; இவர் ரூ. 1.000 கோடி என்கிறார். யார், யார் எப்படி, எப்படி ஏலம் எடுத்தார்கள், என்று தெரியும். நமக்குள்ளே பேசக்கூடாது அதெல்லாம் யார், யார்