கலைஞரின் சட்டமன்ற உரைகள்
515
எண்ணக்கூடாது அரசாங்கம் என்ன செய்ய முடியும்? வருகிற செய்தியை அந்தந்தப் பகுதிகளிலே இருக்கின்ற போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடியும். அப்படித்தான் தெரிவித் திருக்கிறோம்
இங்கேகூட ஒரு பழைய நிகழ்ச்சி, இந்த அவையிலே நடந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகிறார் "பேரவைத் தலைவர் அவர்களே, இத்தகைய பிரச்சினைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே எழுப்பும்போது. காவல் துறையிடமிருந்துதான், நான் விவரங்களைப் பெற்று இந்த அவைக்குத் தரமுடியும். தனிப்பட்ட முறையில் நான் 'ஷெர்லாக் ஹோம்ஸ்' பாணியிலே போய் புலனாய்வு செய்ய முடியாது. (மேசையைத் தட்டும் ஒலி). எல்லோரும் மேசையைத் தட்டினார்கள். "நானே ஒற்றர் மாதிரி போய், அல்லது ஒரு பெரிய துப்பறியும் நிபுணர் மாதிரி, 'ஷெர்லாக் ஹோம்ஸ்' பாணியில் நானே நேரடியாகப் போய் செய்ய முடியாது. போலீஸ்காரர்கள் தான் செய்யவேண்டுமென்று” சொல்லிவிட்டு, இன்றைக்கு என் மேலே குறை கூறிக்கொண்டிருக்கின்ற ஜெயலலிதா, இதே அவையிலே பேசி இதிலே அச்சிடப்பட்டு, நடவடிக்கைக் குறிப்பிலே இருக்கிறது. இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் என்னவென்றால் ஒழுங்காக யார் யாரோடு கலந்து பேசி, எந்தெந்தத் தலைவர்களோடு ஆலோசித்துச் செய்ய வேண்டுமோ, அப்படித்தான் ஆலோசித்து எல்லா காரியங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. அதை விடுத்து, C.B.I. C.B.I., என்றால் C.B.I. யில் வழக்குகள் நீண்ட நாட்கள் ஆகின்றன. C.B.I.-யை நான் குறை சொல்லமாட்டேன். ஆனாலும் இதே C.B.I. விசாரணை கேட்டு, மேலவளவு நிகழ்ச்சிக்கு தேவர் பேரவை எனக்குக் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கையை வைத்து நான் நம்முடைய எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் அவர்களிடம் அவர்கள் அப்பொழுது அதற்கு பொறுப்பு ஏற்றிருந்த அமைச்சர் அவர்களிடம் கேட்டு எழுதினேன். இல்லை என்றுதான் பதில் வந்தது. 'இப்பொழுது C.B.I. தர இயலாது, போலீஸ்காரர்களே விசாரிக்கிறார்கள். அதுவே போதும்' என்று பதில் வந்தது. மதுரை லீலாவதி, கம்யூனிஸ்டு கட்சியினுடைய கவுன்சிலர் கொலையிலே
ஆ