உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

եւ

காவல்துறை பற்றி

திராவிட முன்னேற்றக் கழகத்தார் சம்பந்தப்பட்டிருந்தாலும்கூட அவர்கள்மீது குற்றச்சாட்டு இருந்தபோதும்கூட, எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், அன்று கைது செய்யப்பட்டவர்கள் எத்தனையோ பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்திருக்கிறார்கள் என்பதும் எங்களுக்கும் தெரியும். 10, 11 மாதங்கள் ஆகின்றன; இன்னும் யாரும் ஜாமீனில்கூட வரவில்லை. அவர்களுக்காக C.B.I. விசாரணை வேண்டுமென்று கேட்டார்கள். நம்முடைய அரசாங்கத்தை நம்பியோ, நம்பாமலோ C.B.I. விசாரணை வேண்டுமென்று கேட்டார்கள். சி. பி. ஐ. விசாரணை வேண்டுமென்று பரிந்துரை செய்து எழுதினேன். அதற்கும் 'இப்பொழுது ஒழுங்காகத்தானே போலீஸ்காரர்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். C.B.I. அனுப்ப இயலாது' என்ற ரீதியில் எனக்குக் கடிதம் எழுதிவிட்டார்கள்.

அடுத்து, இரயில் குண்டு வெடிப்பு அண்மையில் நடை பெற்றது. பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது. அப்பொழுதும் C.B.I. விசாரணை வேண்டுமென்று இரயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் எழுதினேன். C.B.I. அனுப்ப இயலாது என்று எழுதி விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் C.B.I. இல்லாமலேயே இப்பொழுது நடைபெறுகின்ற கோவை குண்டு வெடிப்பு தொடர்பான அந்த விசாரணைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது. தீவிரவாதிகளுடைய தலைவர்களெல்லாம் பிடிபடு கின்றார்கள். பிடிக்கப்படவே முடியாது என்று எண்ணப்பட்ட ஏர்வாடி காசிம் கூட இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட அந்தச் செய்தியையும் இந்த அவையிலே எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். எனவே, வெகுவேகமாக இந்தப் புலன் விசாரணை முன்னேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தால், இதிலே C.B.I. விசாரணை தேவையா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு மாண்புமிகு உறுப்பினர்களுக்கு உண்டு என்பதை நான் எடுத்துக்காட்டி இந்த அளவோடு இதை நிறுத்துகின்றேன்.

இன்னொன்று, போலீசார் சில போராட்டங்களிலே அத்துமீறி தலையிடுகிறார்கள். பாரபட்சமாக நடந்துகொள் கிறார்கள். என்றெல்லாம்கூட இங்கே பேசினார்கள். நம்முடைய கிருஷ்ணசாமி அவர்களும் நான் வரும்போது அதைத்தான்