கலைஞரின் சட்டமன்ற உரைகள்
521
இயங்கும் 'மருதம்' வளாகத்தில் மற்றுமொரு மேல்தளம் இருபது லட்ச ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. சென்னை, எழும்பூரில் காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலர்களின் உணவுக்கூட இரண்டாவது மாடியில், குளிர் சாதன வசதியோடுகூடிய கூட்ட அரங்கம் ஒன்று 25 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. விருதுநகரில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு 16 இலட்ச ரூபாய் செலவில் புதிய குடியிருப்பு கட்டப்படும். தடய அறிவியல் துறையில் ஒரு குடிநீர் வழங்கல் திட்டம் ஒரு இலட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படும். தடய அறிவியல் துறையில், மானிடயியல், வெடி மருந்துகள், ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் ஆகிய பிரிவுகளுக்கு 1.68 இலட்ச ரூபாய் செலவில் சீர்வளி வசதி செய்து தரப்படும். அறிவியல் உதவியாளர் பதவி 2.75 இலட்ச ரூபாய் செலவில் அறிவியல் அலுவலர் பதவியாக நிலை உயர்த்தப்படும். ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் ஒரு டி. எம். ஈ. அடர்த்திவீத அளவை மீட்டர் வாங்கப்படும். 15 இலட்ச ரூபாய் செலவில் திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வுக் கூடத்திற்கு மூன்று டி. எஸ். டி. ஸ்கேனர் வாங்கப்படும். மேற்கண்ட திட்டங்களுக்காக மொத்தம் 3.67 கோடி ரூபாய் செலவிடப்படும்.
காவல் பயிலரங்கம். மனித உரிமைகள், மனித நேயம் பற்றிய காவல்துறையினுடைய பயிலரங்கம். பொதுமக்களிடையே காவல்துறையின் மதிப்பை உயர்த்தும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரக் காவல் ஆணையர்கள் மூலமாக ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்கும் பயிலரங்கங்களை நடத்தலாம் என அரசு உத்தேசித்துள்ளது. மனித உரிமைகள் மற்றும் மனித நேயம் தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்கள் மற்றும் காவல்துறை மட்டத்தில் ஏற்படுத்த இப்பயிலரங்குகள் உதவும். குறைந்தபட்சம் காலாண்டிற்கு ஒரு முறை இந்தப் பயிலரங்கங்கள் நடத்தப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய செலவினத்திற்கு அரசு முதல் தவணையாக ரூ. 10 இலட்சம் அளித்துள்ளது.