542
காவல்துறை பற்றி
ஊதியம் இப்பொழுது 5,300 ரூபாயாக இருக்கிறது. திரு. சுப்பராயன் அவர்கள் குறிபிட்டதைப்போல, துணை வட்டாட்சியருடைய அடிப்படை ஊதியம் 5,500 ரூபாயாக இருக்கிறது. அந்த அளவிற்கு இதைச் சரிசெய்யவேண்டுமென்றால், அதையே 5500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று சொன்னால், மத்திய அரசு தருகின்றதைவிட அதிகமாகக் கொடுத்துவிட்டோம் என்று அதைப்போல எங்களுக்கும் கொடுங்கள் என்று பல துறைகளில் உள்ளவர்கள் வாதிடக்கூடும் எனவேதான் இதிலே நாம் வெகுவாகக் கை வைக்க இடமில்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
குற்றங்களைப்பற்றி இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். சென்னை மாநகரத்திலே ஏதோ பயங்கரமான சூழ்நிலை இருப்பதாகச் சொன்னார்கள். நான், இருப்பது குறைவு என்றாலும்கூட, அதை ஏற்றுக்கொண்டு பேசவில்லை. ஆனால் ஒன்றை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். புதுடெல்லியிலே தேசிய குற்ற ஆவணக் கூட்டம் National Crime Records Bureau என்ற ஒன்று இருக்கிறது. அது வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு 100 சதுர கிலோ மீட்டருக்கும், அகில இந்திய சராசரியில் காவலர்களுடைய எண்ணிக்கை 38 பேர், ஆனால் தமிழ்நாட்டில் 57 பேர், ஒரு காவலருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆகும் செலவு அகில இந்திய சராசரியில் 61,883 ரூபாய். தமிழ்நாட்டில் 68,059 ரூபாய்.
குற்றங்களைப் பொறுத்தவரையில் குற்றப்பத்திரிகை விகிதாச்சாரம் : அகில இந்திய சராசரி 76.9%. தமிழ்நாடு 90.6%. நீதிமன்றங்களிலே வழங்கப்படுகின்ற தண்டனையின் விகிதாச் சாரம் : அகில இந்திய சராசரி 37.8%; தமிழ்நாட்டு சராசரி 63.6 சதவிகிதமாக இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வேன்.
காவலர்களுடைய நலனுக்கான செலவினம் 1991 முதல் 1996 வரை, தமிழகத்திலே கடந்த 5 ஆண்டு காலத்தில் தொடரும் செலவு 5.58 கோடி ரூபாய்; தொடராச் செலவு 59.96 கோடி ரூபாய். ஆக, கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 65.54 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. 1996 முதல் இந்த 3 ஆண்டுகளில், கழக ஆட்சியில், தொடரும் செலவு 47.40 கோடி