உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

543

5

ரூபாய்; தொடராச் செலவு 223.55 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில் காவலர் நலனுக்காகச் செலவிடப்பட்டது மொத்தம் 65 கோடி ரூபாய்; இந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்டது மொத்தம் 270 கோடி ரூபாய் என்பதை நான் பெருமிதத்தோடு இங்கே தெரிவித்துக்கொள்வேன்.

காவல் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கே எடுத்துக்கூறப்பட்டது. நம்முடைய உறுப்பினர் திரு. பழனிசாமி அவர்கள் பேசும்போதுகூட இன்னும் அதிகமான பயிற்சியை அவர்களுக்குத் தரவேண்டும், மனித உரிமையைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். பயிற்சி இப்போதே 6 மாதத்திலிருந்து 9 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். பயிற்சியை அளிப்பதற்காகப் பல முறைகள் இன்றைக்குக் கையாளப்படுகின்றன. அவர்களுக்கு அத்தகைய பயிற்சிகளை அளிக்கின்ற முனைப்பான காரியத்தில் இந்த அரசும் காவல் துறையும் ஈடுபட்டிருக்கின்றன. பயிற்சி பெற்றால் மாத்திரம் போதாது என்று காவல் துறையை நவீனமயமாக்குவதற்காக, குறிப்பாக தகவல் தொடர்பில் மேம்பாடு, வாகனங்கள் வாங்குதல், புலனாய்வுக்குத் தேவையான கருவிகள் வாங்குதல், போக்குவரத்து மேம்பாடு முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்பிற்கும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் வேண்டிய உபகரணங்கள் வாங்குதல், காவல் துறையைக் கணினிமயமாக்குதல், காவல் துறையினருக்கு மாண்புமிகு உறுப்பினர் சொன்னதுபோன்ற பயிற்சி அளித்தல் ஆகிய பணிகள் காவல் துறையை நவீனமயமாக்க வேண்டுமென்ற திட்டத்தின்கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 1991 முதல் 1996 வரையில் 41,56,27,000 ரூபாய் இந்தத் திட்டத்திற்காகச் செலவு செய்யப்பட்டது. இந்த 3 ஆண்டு காலத்தில் 40,93,54,000 ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

குற்றங்கள் சென்னை மாநகரத்திலே, மற்ற மாநகரங் களோடு ஒப்பிடும்போது அகில இந்திய அளவிலே, மிகவும் குறைவான அளவிலேதான் இருக்கின்றன என்பதை நான்