உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

553

அதேபோல, 15-8-1998 அன்று சுமிதா என்ற மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு வழக்குப் பதிவு. அந்த எதிரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

8-12-1998 அன்று உஷா என்ற பெண்ணைக் கொலை செய்தது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரி பரமேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

I

6-1-1999 அன்று ஜாய் என்ற பெண்ணை மானபங்கம் செய்ததற்காக எதிரி ஸ்டீபன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு. 19-1-1999 அன்று ஸ்டீபனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

30-3-1998 அன்று சசிகலா என்ற பெண்ணைப் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக எதிரிகள் அய்யாசிவம், அர்ச்சுனன் ஆகியோர்கள்மீது வழக்கு. எதிரிகள் இருவருமே 2-4-1998 அன்று கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை முடிந்து 18-12-1998 அன்று நீதிமன்றத்திலே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப் பட்டாகிவிட்டது.

29-1-1999 கீழசந்தையடி என்ற இடத்தில் அம்பிகா என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து இறந்துள்ளார். இதுதொடர்பாக, கன்னியாகுமரி காவல் நிலையத்திலே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோட்டாட்சியர் விசாரணை செய்து வரதட்சணைக் கொடுமையில்லை என்று அறிக்கை கொடுத் திருக்கின்றார். எனவே, எந்த ஒரு சம்பவத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படாமலோ, எதிரிகள் கைது செய்யப்படாமலோ இல்லை என்பதை நான் அன்பர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் திரு. மணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது தொடர்பாகச் சில முக்கியமான அறிவிப்புகளை இந்த அவையிலே நான் வெளியிட விரும்புகிறேன். காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நலவாழ்வு நிதியின்கீழ் மருத்துவ வசதிக்கு நிதி உதவி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. வெளிநாட்டிலே மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள விரும்பினால் அந்த நிதியிலிருந்து 10 சதவிகித வட்டிக்குக் கடன் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது