உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




554

காவல்துறை பற்றி

மாரடைப்பு, சிறுநீரக மாற்றுச் சிகிச்சை ஆகிய பெரிய வியாதிகளுக்கு இந்த நிதியிலிருந்து உதவி வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு 108 காவலர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்தார்கள். அதற்கு 83 இலட்சம் ரூபாய் செலவாகியிருக்கின்றது. இந்த நிதிக்கு அரசின் உதவித் தொகையாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியின்கீழ் கோரிக்கைகள் கூடுதலாக வந்துள்ள காரணத்தால் அரசு இந்த நிதிக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதை இப்போது ஒரு கோடி ரூபாயாக நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

தமிழகத்திலே 57 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின்றன. அந்த நிலையங்களுக்கு ஏற்கெனவே ஜீப்புகள் வழங்கப்பட்டாகிவிட்டன. தற்போது காவல் நிலையங்களுக்குட் பட்ட இடங்களுக்கு விரைவாகச் சென்று, புகார் மனுக்கள் மீது விசாரணை செய்திடவும், சம்மன்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சென்று அளிக்கவும் உதவியாக ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்திற்கும் ஒரு மொஃபட் மோட்டார் சைக்கிள் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

பாதிக்கப்பட்டோர் உதவி நிதி என்று ஒரு திட்டம் உருவாக் கப்பட்டு, நடைபெற்று வருகிறது. அதில் கொலையுண்டவர்களின் வாரிசுகளுக்கு, கொலையுண்டவர்கள் என்றால் கலவரங்களிலே அல்ல, வேறு அமளிகளிலே அல்ல, பொதுவாக வேறு காரணங்களினால், சொந்தக் காரணங்களினால், கொலையுண்டால் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு 10,000 ரூபாயும், கடுமையான காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாயும், கற்பழிப்பு போன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாயும் இதுவரையிலே வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கடத்தப்பட்டு பாதிப்புக்குள்ளான பெண்கள் என்றால் அவர்களுக்கு 5,000 ரூபாயும், வரதட்சணை காரணமாக உயிரோடு எரிக்க முயற்சித்தாலோ அல்லது வேறு வகையில் கொலை செய்ய முயற்சித்தாலோ தீக்காயம் அடைந்தால் 5,000 ரூபாயும், அந்த நிகழ்வில் மரணமே அடைந்துவிட்டால், அவர்களுடைய வாரிசுகளுக்கு 10,000 ரூபாயும், வரதட்சணைக்