உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

597

திருட்டு வீடியோ. சினிமா படம் எடுப்பவர்களை பெரும் நஷ்டத்திற்கு ஆளாக்கும் வகையிலே நடைபெறுகின்ற ஒரு காரியம் திருட்டு வீடியோ என்பது. ஒரு படம் தயாரிக்கப்பட்டு, அது வெளியிடப்பட்ட முதல் நாளோ அல்லது வெளியிடப் படுவதற்கு முதல் நாளோ இந்த திருட்டு வீடியோக்கள் நாட்டிலே பரவி, படத்தினுடைய வசூலைக் கெடுப்பதாக படத் தயாரிப்பாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பலமுறை என்னிடத்திலே முறையிட்டு இருக்கின்றார்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளித்த உறுதியின் காரணமாக 2000ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை திருட்டு வீடியோ தொடர்பாக 99 வழக்ககள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 108 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். 2 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

1999ஆம் ஆண்டில் திருட்டு வீடியோ தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு 123 வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் 10 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 68 வழக்குகள் நிலுவையிலே இருக்கின்றன. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 6 இலட்சத்து 57 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருட்டு வீடியோக்கள் கைப்பற்றப்

பட்டன.

சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் திருட்டு வீடியோ தொடர்பாக மொத்தம் 80 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில் 7 பேர்மீது குண்டர்கள் தடுப்புச் சட்டப்படி வழக்குப் போடப்பட்டு மூன்று மாதங்கள் சிறையிலே இருந்த பிறகுதான் உயர் நீதிமன்றத்தின் ஆய்வுக் குழு ஆணைப்படி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்கள். மேலும் 36 பேர்மீது வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. 5,840 வி.சி.டி.-க்களும், 14,205 வீடியோ கேசட்டுகளும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டில் மாத்திரம் சென்னை மாநகரில் 24 வழக்குகள் போடப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 5,455 வி.சி.டி-க்களும், 115 வீடியோ கேசட்டுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன. 12-5-2000 அன்று மாலை நடைபெற்ற சோதனையிலே