598
காவல்துறை பற்றி
மாத்திரம் 1,180 வி.சி.டி.-க்கள் கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரிலே உள்ள சில வீடியோ கடைகளில் திடீர் சோதனை செய்ததில் 79 வி.சி.டி.-க்கள் கைப்பற்றப்பட்டு மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கின்றேன்.
காவல் நிலைய மரணங்களைப்பற்றி நம்முடைய ஞானசேகரன் அவர்கள் பேசினார்கள். காவல் நிலையத்திற்குச் சென்றாலே மரணம்தானா என்று ஆத்திரத்தோடு கேட்டார்கள். காவல் நிலைய மரணங்களை இந்த அரசு வரவேற்கவில்லை. மாறாக தன்னுடைய கவலையை அதற்காகத் தெரிவித்துக்கொள்கிற அரசுதான் இந்த அரசு என்பதையும் அதற்குக் காரணமாக இருக்கின்ற காவல் துறை அதிகாரிகளை கடுமையாகத் தண்டிக்கின்ற அரசு இந்த அரசு என்பதையும் மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாக அறிவார்கள். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அளவுக்கு, சமீப காலமாக, காவல் நிலைய மரணங்கள் இப்போது நிகழவில்லை. உறுப்பினர்களுக்குத் தரப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பிலும் அது விளக்கப்பட்டிருக்கிறது. 1996ஆம் ஆண்ட காவல் நிலையங்களிலே நடந்த மரணங்கள் 13; 1997-ல் 16; 1998-ல் 8; 1999-ல் 8. இந்த மரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதுதான் இந்த அரசாங்கத்தினுடைய முக்கியமான நோக்கம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தவறு செய்த அதிகரிகள் மீது இந்த அரசு எடுத்த நடவடிக்கை, இந்த 4 ஆண்டுகளில் மட்டும், 1 Inspector, 2 Sub- Inspector, 9 காவலர்கள் இந்தக் காவல் நிலைய மரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 4 D.S.P.-க்கள், 16 Ispectors, 20 Sub-Inspectors, 75 காவலர்கள்மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் செல்லக்குமார் பேசும்போது ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு தமிழகத்திலே நடைபெற்றதைக் குறித்தும், அது தடுக்கப் பட்டதைக் குறித்தும், தடுக்கப்பட்ட நேரத்திலேகூட அவர்கள், அந்த மாநாட்டுப் பிரச்சாரம் செய்தார்கள் என்பது குறித்தும் இங்கே