கலைஞரின் சட்டமன்ற உரைகள்
599
கருத்துத் தெரிவித்தார். ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டை இந்த அரசு ஆதரிக்கவில்லை என்பதற்கு அடையாளமாகத்தான், நிச்சயமாக அதை எதிர்க்கிறது என்பதற்குச் சான்றாகத்தான், சிதம்பரத்தில் நடைபெற்ற அந்த மாநாடு தடுக்கப்பட்டது. அந்த சுமார் மாநாட்டிலே கலந்துகொள்வதற்கு வந்தவர்களெல்லாம் 200-க்கும் மேற்பட்டவர்கள் - கைது செய்யப்பட்டார்கள். ஆனால் டாக்டர் செல்லக்குமார் பேசும்போது ஒன்று கேட்டார். திருவாரூரில் இந்த மாநாடு நடத்த எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்பது போன்ற ஒரு கருத்தை இங்கே எழுப்பினார். தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு, திரு. நெடுமாறன் தலைமையில் 19-1-1997 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழர் எச்சரிக்கை மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்த இருந்தார்கள். இதற்குக் காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட Writ மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் மாநாடு நடத்த அனுமதி வழங்கிவிட்டது. உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய காரணத்தால்தான் மதுரையிலும், தொடர்ந்து திருவாரூரிலும், இராணிப்பேட்டையிலும் மாநாடு நடத்த, அந்தக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டன. அவைகூட பெரிய அளவில் நடைபெற்ற மாநாடுகள் அல்ல. ஆனால் அந்த நேரத்திலே இலங்கையிலும் இதுபோன்ற அளவிற்கு தீவிரமான நிலையில்லை. இருந்தபோதிலும்கூட, நீதிமன்றத்தினுடைய அந்தத் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட வேண்டியவர்களானோம். எனவே அப்போது தடை விதிக்கப்பட வில்லை. இந்த நேரம் மிகத் தீவிரமான நேரம். இலங்கையிலே தீவிரமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நேரம்.
7-5-2000 அன்று சிதம்பரத்தில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்துவதாக முதலில் அறிவித்துவிட்டு பின்னர் இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆனையிறவு வெற்றி மாநாடு என்ற பெயரால் மாநாடு நடத்தப் போவதாக அறிவித்தார்கள். இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கூட்டம் நடத்தவிருந்த திருமண மண்டபத்திற்கு அச்சுறுத்தல்கள் வந்ததாலும், சட்டம் ஒழுங்கைக் கருதியும் இந்த மாநாட்டிற்கு அரசு தடை விதித்தது. தடையைமீறி மாநாட்டிற்கு வந்திருந்த 258 பேர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு