உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




600

காவல்துறை பற்றி

அவர்கள் வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திலே அவர்களுக்கு என்று ஒலிப்பெருக்கி எதுவும் கொடுக்கப்பட வில்லை. ஒலிப்பெருக்கி இல்லாமலே - நாங்கள் எதிர்க்கட்சியிலே இருந்திருக்கிறோம். நீங்கள் இப்போது இருக்கிறீர்கள், கைது செய்யப்பட்டு கொண்டுபோய் காவல் நிலையத்திலே வைத்தாலே அங்கே நாம் ஒரு கூட்டத்தை நடத்திவிடுவோம். இது இயற்கை. நாங்கள் ஜெயிலில் இருந்தபோதுகூட - 6 மாதம் நான் ஜெயிலில் இருந்தபோதும் சரி, பிறகு 3 மாதம், 2 மாதம் இருந்தபோதும் சரி, அங்கே, ஜெயிலுக்குள்ளே கூட்டம் நடத்துவதுதான் வழக்கம். அது மாதிரி நடந்த கூட்டம்தானே தவிர அரசாங்கத்தினுடைய அனுமதியோடு நடைபெற்ற கூட்டம் அல்ல என்பதை நான் நண்பர் செல்லக்குமார் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

விடுதலைப் புலிகளை அனுமதிக்கக் கூடாது என்று நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே உணர்ச்சி வசப்பட்டு சில கருத்துக்களை சொன்னார்கள். ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே, இலங்கையில் உள்ள தமிழீழத்தை ஒரு காலத்திலே ஆதரித்தோம் என்ற காரணத்திற்காக அல்லது இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதற்காக கண்ணீர் உகுத்தோம் என்ற ஒரு காரணத்திற்காக அந்தப் போராளிகள் செய்கின்ற எல்லாக் காரியங்களையும் நாங்கள் ஆதரித்தவர்கள் அல்ல. இங்கே சொன்னார்கள் அமிர்த லிங்கத்தைப்பற்றி. அதைப்போல ஸ்ரீசபாரத்தினத்தைப்பற்றி. அவர்களெல்லாம் எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். நான்கு, ஐந்து இயக்கங்கள் அதிலே இருந்தன. இந்த நான்கு, ஐந்து இயக்கங்களும் இந்தியாவிலே இறக்குமதியானபோது ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு இயக்கத்திற்குப் பின்னணியிலே இருந்து அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக நன்றாகத் தெரியும். அந்த நிலையிலேதான் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகள் இவர் சொல்லுகின்ற Tigers (L.T.T.E.) அவர்களுக்கு, அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம்