உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




622

காவல்துறை பற்றி

உரை : 21

நாள் : 30.08.2006

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு தேவையான, முக்கியமான, இந்த அரசு சட்டம்-ஒழுங்கை எப்படிக் காத்திடுகிறது என்பதற்குச் சான்றான ஒரு செய்தியை முதலில் தெரிவித்துவிட்டு, என் உரைக்கு வருகின்றேன்.

நேற்றையதினம், திண்டுக்கல் மாவட்டத்தில், தந்தை பெரியார் சிலைக்கு ஏற்பட்ட ஒரு களங்கம் குறித்து, நான் இங்கே உரையாற்றும்போது, அதற்குக் காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தேன். அவ்வாறே, அச்சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகள், தர்மராஜ் என்பவரும், தட்டுவண்டி மணி என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார்கள் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நம்முடைய விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்றக் கட்சியினுடைய தலைவர் செல்வம் அவர்கள், கடந்தகால ஆட்சியிலே தன்மீது போடப்பட்ட, உண்மைக்கு மாறான வழக்குகளை C.B.I. விசாரித்து வருகிறது என்பதையும், உண்மையை வெளியிலே கொண்டுவர, விரைந்து முயற்சிகளை அரசின் சார்பில் சட்டப்படி எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் இங்கே உரையாற்றும்பொழுது வைத்தார். இங்கே வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளில் அது ஒரு முக்கியமான கோரிக்கை; உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை. அதிலும் இந்த அவையிலே உள்ளவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால், பரிகாரம் தேடவேண்டிய கோரிக்கை. பரிகாரம் தேடுவோம் என்ற உறுதியை நான் (மேசையைத் தட்டும் ஒலி) செல்வம் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.