உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

635

கிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்புகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ஏதோ அதிகாரிகளையெல்லாம் மாற்றிவிட்டோம் என்று எதிர்தரப்பிலேயிருந்து இன்னொரு குரல் கிளம்பியது; 'அதிகாரிகளை மாற்றுவதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய பணியாக இருக்கிறது' என்று.

2001-இல் 5 D.G.P.-க்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியிலே, ஒரே ஒரு D.G.P. தான் மாற்றப்பட்டார். அலெக்சாண்டர் இருந்தார், அவர் மாற்றப்பட்டார், அவர் மாற்றப்பட்டு வந்த D.G.P. முகர்ஜி இருக்கிறார், அவ்வளவுதான். எங்கே மாற்றிவிட்டோம்? எங்கோயோ பத்து D.G.P.-க்களை மாற்றிவிட்ட மாதிரி - மாற்றியது அவர்கள் - ஐந்து பேரை. ஐந்து பேர் மாற்றப்பட்டு - D.G.P.-யே ஐந்து பேர் மாற்றப்பட்ட ஒரு சூழ்நிலை அங்கே.

A.D.G.P. 21 பேர் அ.தி.மு.க. ஆட்சியிலே மாற்றப்பட்டிருக் கிறார்கள். தி.மு.க. ஆட்சியிலே 15 பேர்தான். I.G., 27 பேர் அ.தி.மு.க. ஆட்சியிலே மாற்றப்பட்டவர்கள்; தி.மு.க. ஆட்சியிலே 20 பேர்தான். S.P., அ.தி.மு.க. ஆட்சியிலே 86 பேர் மாற்றப்பட்டார்கள்; தி.மு.க. ஆட்சியிலே 92 பேர். இதிலே, ஒரு 6 பேர்; இந்த 6 பேரை மாற்றியதுகூட, பதவி உயர்வின் காரணமாக இந்த மாற்றம் transfer ஏற்பட்டது.

D.S.P. 323 பேர் அ.தி.மு.க. ஆட்சியிலே; 332 பேர், தி.மு.க. ஆட்சியிலே மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதிலே 70 பேர் பதவி உயர்வு காரணமாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். Inspectors, 309 பேர் அ.தி.மு.க. ஆட்சியிலே; 280 பேர் தி.மு.க. ஆட்சியிலே. இவையெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. ஆட்சியில் பதவிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட முதல், மூன்று மாதங்களில் செய்யப் பட்டவையாகும். ஏதோ தி.மு.க. ஆட்சியிலே வந்ததும் வராததுமாக எல்லோரையும் மாற்றிவிட்டோம், எல்லோரையும் மாற்றிவிட்டோம் என்று சொல்லுவதும், பத்திரிகைகளிலே அதை வெளியிடுவதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதும்தான் இவர்களுடைய பிரச்சாரமாக இன்றைக்கு இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை.