636
காவல்துறை பற்றி
ஒரே மாதத்தில் D.G.P.-யாக இருந்த ஆர். ராஜகோபாலனை மாற்றிவிட்டு, ரவீந்திரநாத் அவர்களை D.G.P.-யாக நியமனம் செய்து, அவரை விட்டு என்னைக் கைது செய்யச் சொல்லி, அந்தக் காரியம் முடிந்ததும், அவரை suspend செய்துவிட்டு, நெயில்வால் அவர்களை D.G.P.-யாக நியமித்து, அதன்பிறகு ராஜகோபாலனை D.G.P.-யாக நியமித்து, 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்பதைப்போல, போன அவர், திரும்ப அழைக்கப்பட்டார். (மேசையைத் தட்டும் ஒலி). அதற்குப்பிறகு, கோவிந்த் அவர்களை D.G.P.-யாக நியமித்து, பிறகு கோவிந் அவர்களையும் மாற்றிவிட்டு, அலெக்சாண்டரை D.G.P.-யாக நியமித்தார்கள் என்றால், அந்த ஹாஸ்ய வெடிகள் எல்லாம், தமிழக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, காவல் துறை நிர்வாகத்திலே வெடிக்கப்பட்டதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அலெக்சாண்டர், பெயருக்கு ஏற்ற உயரம், கம்பீரம், இதெல்லாம் உள்ளவர்தான். ஆனால், ஆட்சி மாறி, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், அலெக்சாண்டர் எங்கே போனார்? இராமேசுவரம் கடற்கரைக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாற்காலிகூட கிடையாது; ஒரு மேசைகூட கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே அவர் அங்கே மாற்றப்பட்டார். கடைசியாக அவருக்கு விமோசனம் ஏற்பட்டு, இரோமேசுவரத்திலே இருந்த காரணத்தாலோ, என்னவோ, (சிரிப்பு), விமோசனம் ஏற்பட்டு, கடைசியாக வந்து சேர்ந்தார். வந்த பிறகும் அவரை மாற்றிவிட்டார்கள், பிறகு கோவிந்த் அவர்களை அங்கே நியமித்தார்கள். பிறகு அவரும் மாற்றப்பட்டார். இப்படி D.G.P.- யினுடைய நிலைமைகளே இந்தளவுக்கு ஆயிற்று.
நம்முடைய நண்பர் சேகர் பாபு பேசும்போது சொன்னார், காவல் துறைக்காக, தி.மு.க. ஆட்சியில், 1996-2001ஆம் ஆண்டுகளில் செலவழிக்கப்பட்டது 3,988 கோடி ரூபாய்தான் என்றும், 2001-2006ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்காக 8,000 கோடி ரூபாய் செலவழிக்கப்ட்டதாகவும் இங்கே கூறினார். கேட்பதற்கு நிரம்ப இனிமையாகத்தான் இருந்தது; பெருமையாகத்தான் இருந்தது. இன்னும்கூட கைதட்டியிருக்கலாம். அது அந்த அளவுக்கு இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால்,