உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

647

பல்லடம், பொள்ளாச்சி கிழக்கு, ஆண்டிமடம், வெள்ளியணை, லாலாபேட்டை, சமயபுரம், பி16 அண்ணா நகர், திருவில்லிப்புத்தூர் நகரம், திண்டுக்கல் வடக்கு நகரம், இளையான்குடி, களக்காடு, புதுக்கடை, சின்னமனூர், முரப்பநாடு, திருமங்கலம் நகரம், இராமநாதபுரம் நகரம், பாளையங்கோட்டை.

இஃதன்னியில், பின்வரும் 12 நகரக் காவல் நிலையங் களுக்கு ரூபாய் 318 இலட்சம் செலவில் புதிய கட்டடங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையம், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையம், அம்மையார் ஆரம்பித்தார் என்பதற்காக அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டாமல் விடவில்லை; கட்டுகிறோம். (மேசையைத் தட்டும் ஒலி) பீளமேடு, சரவணப்பட்டி, திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவாரூர் நகரம், சிலைமான், விக்கிரமங்கலம், எம். பாடுபட்டி.

பின்வரும் 14 ஊரகக் காவல் நிலையங்களுக்கு, ரூபாய் 224 இலட்சம் செலவில் புதிய கட்டடங்கள் கட்ட முடிவு:

திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையம், தூக்கனம் பாக்கம், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், ஜெகதாப் பட்டினம், இலுப்பூர், அரும்பாவூர், குன்னம், வடக்காடு, ஆத்தூர், ராதாபுரம், சாத்தான்குளம், களியக்காவிளை, திருப்பூர் ஊரகம், நெகமம்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஆயுதப் படைப் பிரிவிலுள்ள காவலர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுதங்களை வைக்கும் பாதுகாப்பு அறையும், ஆயுதப் படை வளாகமும் ஒரு கோடி ரூபாய்ச் செலவில் அமைக்கப்படும்.

சென்னைப் பெருநகரில், வியாசர்பாடி, பழவந்தாங்கல், புழல் ஆகிய காவல் நிலையங்களுக்கு 190 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).