உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




648

காவல்துறை பற்றி

மருதம் வளாகத்திலுள்ள அதிரடிப்படை பள்ளி, ஆண் மற்றும் பெண் காவல் பணியாளர்களுக்கும், அதிரடிப்படைக்கும், ரூபாய் 144 இலட்சம் மதிப்பீட்டில் தனியான பயிற்சி மையம் ஒன்றும், தங்குமிடங்களும் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

தமிழ்நாடு தடய அறிவியல் துறைக்கு, ரூபாய் 228 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன உபகரணங்கள் வாங்கப்படும். இந்த ஆண்டில் சென்னைப் பெருநகர் உள்ளிட்ட, தமிழ் நாடு காவல்துறையைக் கணினி மயப்படுத்தி, நவீன மயமாக்கும் திட்டத்திற்கு, 378 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

ஊர்க் காவல் படை பற்றி இங்கே பேசப்பட்டது. ஊட்டியிலே உள்ள ஊர்க் காவல்படை பயிற்சி மையத்திற்குப் புதிய கட்டடம் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

சிவகங்கை, புதுக்கோட்டை, நாகர்கோவில், உதகமண்டலம் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்களுக்குக் கட்டடங்கள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

கடற்கரை காமராஜர் சாலையிலே, தற்போதுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே புதிதாகக் கூடுதல் கட்டடம் கட்டப்படும். அந்த காமராஜர் சாலையிலே உள்ள கட்டடம், D. G. P. Office - அதை இப்பொழுது பார்த்தாலும் அதற்கு வரவிருந்த ஆபத்தை நாமெல்லாம் மறக்க முடியாது. 1994ஆம் ஆண்டு, அந்தக் கட்டடத்தை இடிப்பதற்கு ஏலமே விட்டு விட்டார்கள். அப்படி ஏலம் விட்டு, அதை ஏலத்திலே எடுத்து, இடிப்பதற்கும் தொடங்கிவிட்டார்கள். நல்லவேளையாக, அந்த நேரம் பார்த்து, 1996-ல் அவர்கள் அதை இடித்துக் கொண்டிருக்கும் போதே, நம்முடைய ஆட்சி வந்தது. நம்முடைய ஆ ட்சி வந்தபோது, அருள் அவர்களும், இந்த ஆங்கில வேண்டுகோள் ஒன்றை விடுத்து, அந்த ஆங்கில வேண்டுகோளில் C. Subramaniam, former Governor of Maharashtra, Raveendran, former D. G. P., V.R. Lakshminarayanan, former D. G. P., Kamalhassan, film artiste, Ramanathan Krishan, Tennis Player, R.K. Narayan, Author, Semmangudi Srinivasa Iyer, Musician

ஆகிய