664
காவல்துறை பற்றி
இங்கே நம்முடைய நண்பர் ஜெயக்குமார் அவர்கள் பேசும்போது சொன்னார். காவலர்களுக்கு குடியிருப்பு “அம்மா” ஆட்சியில் அதாவது அ.தி.மு.க. ஆட்சியில், கட்டித் தந்ததைப் போல் நீங்கள் கட்டித்தரவில்லை என்று சொன்னார். எனக்கு இதிலே யார் காவலர்களுக்கு அதிகம் செய்தார்கள் யார் செய்ய வில்லை என்ற போட்டா போட்டிக்கு நான் வரவும் இல்லை. அதிலே ஜெயகுமாரோடு எனக்கு அல்லது செங்கோட்டைய னோடு எனக்கு வம்பு தும்பும் இல்லை.
குறைசொல்லி
—
இரண்டுபேரும் எதைச் சொல்கிறோம்? ஒருவரைக் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியுைம், எதிர்க் கட்சி ஆளுங்கட்சியையும் குறைசொல்லி இன்னும் நிரம்ப செய்ய வேண்டும் என்று அந்த லாபத்தை நாம் இரண்டுபேரும் சேர்ந்து கொடுப்பது பாதிக்கப்பட்டிருக்கின்ற காவல்துறையினருக்குத்தான். அதைத்தான் இன்றைக்கு நாம் செய்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
அவர்கள் சொன்னார்கள் அ.தி.மு.க. ஆட்சியிலே கட்டித் தரப்பட்ட குடியிருப்புகளைவிட காவலர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் குறைவாகத்தான் குடியிருப்புகள் கட்டித்தரப் பட்டிருக்கின்றன என்று சொன்னார்கள்.
என்னிடத்திலே உள்ள புள்ளிவிவரப்படி 91-96 என்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் காவலர்களுக்கு குடியிருப்பு 3,503 கட்டித் தரப்பட்டிருக்கின்றது. 1996-2001ல் இந்த ஐந்தாண்டுக் கால தி.மு.க. ஆட்சியில் 12,103 குடியிருப்புக்கள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன (மேசையைத் தட்டும் ஒலி). 12 ஆயிரம் என்பது 3 ஆயிரத்தை விட குறைவானது என்று சொன்னால் நான் ஆமாம் என்று ஒத்துக்கொள்கின்றேன்.
அதுமாத்திரமல்ல, அதற்குப் பிறகும் 2006-2007 தி.மு.க. ஆட்சியில், 2007-2008 தி.மு.க. ஆட்சியில் மேலும் 5 ஆயிரம் வீடுகள்.
5
எனவே யார் அதிக வீடுகள் கட்டித் தந்தார்கள் என்பதல்ல முக்கியம். இந்த போட்டாப்போட்டி ஆளுகின்ற கட்சிக்கும், ஆளப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற எதிர்க் கட்சிக்கும் இடையிலே இருந்தால் அது இடையிலே இருப்பவர்களுக்கு