கலைஞரின் சட்டமன்ற உரைகள்
665
நல்லதுதான். அந்த வகையிலே நான் இந்தப் போட்டா போட்டியை வரவேற்கிறேன். இதை நான் தவறு என்று கருதவில்லை.
இன்னொன்று சொன்னார்கள் தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டன, அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாக தமிழகம் இருந்தது. இந்த ஆட்சியிலே பூங்காவிலே புயல் வீசிக் கொண்டிருக்கின்றது. இப்போது புயல் எங்கே வீசுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கே வீசவில்லை புயல், இருந்தாலும் அம்மாவில் ஆட்சியிலேதான் அமைதியாக இருந்தது என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு ஒரு புள்ளி விவரத்தை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஜூன் 2005 முதல் டிசம்பர் 2005 வரையிலான காலக்கட்டத்திலும் கழக ஆட்சியில் ஜூன் 2006 முதல் டிசம்பர் 2006 வரையிலான காலக்கட்டத்திலும் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கழக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை அறியலாம்.
கன்னக் களவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2235, கழக ஆட்சியில் 2061.
திருட்டு :
கழக ஆட்சியில் 8,079.
அ.தி.மு.க ஆட்சியில் 9,304,
கொலைச் செயல்கள் : அ.தி.மு.க. ஆட்சியில் 759, கழக ஆட்சியில் 749.
காயம், கொடுங்காயம் ஏற்படுத்திய நிகழ்ச்சிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 8,238, கழக ஆட்சியில் 7,794.
பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக் குற்றங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் 318, கழக ஆட்சியில் 264.
ஆள் கடத்தல் அ.தி.மு.க. ஆட்சியில் 476, கழக ஆட்சியில் 458.
வரதட்சணை மரணங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் 140, கழக ஆட்சியில் 107.
கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஏற்பட்டக் கொடுமைகள் அ.தி.மு.க. ஆட்சியில் 1086, கழக ஆட்சியில் 764.