உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

காவல்துறை பற்றி

அல்லது மாற்றம் பெற்றுள்ளனர் என்ற உண்மையே நாளும் உறுதியாகி வருகிறது,”

"மதுரை போலீஸ் ரௌடிகள் பிரம்பால்தானே அடித்தனர் என்று பெரிய மந்திரி, கருணாநிதி கூறுகிறார்."

திரு. பி. ஜி. கருத்திருமன் : தயவு செய்து சொல்ல வேண்டும், காங்கிரஸ் பத்திரிகை என்பதற்கு என்ன ஆதாரம்?

மாண்புமிகு கலைஞர் கலைஞர் மு. கருணாநிதி : நாள் பத்திரிகை “கடிதம்” “நாத்திகம்" காங்கிரஸ் பத்திரிகைகள் இல்லையா?

திரு. பி. ஜி. கருத்திருமன் : காங்கிரஸ் கட்சிப் பத்திரிகை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அது எங்கள் கட்சிப் பத்திரிகை இல்லை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அந்தப் பத்திரிகைக்காரர்கள் காங்கிரஸ்காரர்களா, இல்லையா?

திரு. பி. ஜி. கருத்திருமன் : காங்கிரஸ்காரர் நடத்துவதால் அது காங்கிரஸ் பத்திரிகை என்று சொல்லிவிட முடியாது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அவர்கள் அதை ஒத்துக்கொண்ட வரையில் நன்றி. நாளைக்குக் கொடுப்பார்கள்; அந்தப் பத்திரிகைகளில் கருத்திமனைப் பற்றி வரும்.

திரு. பி. ஜி. க பி. ஜி. கருத்திருமன் : அது மலிவான பிரசாரத்திற்கு வேண்டுமானால் உதவும். அநத்ப் பத்திரிகைகள் காங்கிரஸ் பத்திரிகை இல்லை. கவர்ச்சிப் படம் வந்தது யார் பத்திரிகை?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இப்படிப்பட்ட பதிலை வைத்துக் கொண்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகையைப் பற்றிப் பேசியிருக்கக்கூடாது.

மதுவிலக்கைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்கட்டும், அடுத்த ஆண்டு அதை ரத்து