உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

என்

77

செய்யலாம் என்று உறுப்பினர் திரு. இளம்வழுதி குறிப்பிட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. முதல் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன், அறிஞர் அண்ணா, மதுவிலக்கை தீவிரமாக அமுல்படுத்துவோம் சொன்னார்கள். அதற்கு ஏற்றவாறு எல்லா நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுத்துவருகிறது; குறைபாடுகள் இங்கொன்றுமங் கொன்றும் இருக்கலாம்; குறைபாடுகள் இருப்பதால் சிலபேர் மதுவிலக்குச் சட்டத்தை மீறி நடக்கிறார்கள் என்பதால், அந்தக் கொள்கையைக் கைவிட வேண்டுமா என்பது கேள்விக்குரிய விஷயமாகும். அதே நேரத்தில், மத்திய சர்க்கார் இப்படி மதுவிலக்கு சட்டத்தைப் போற்றி, பேணி தீவிரமாக அமுல் நடத்துகின்ற மாநிலங்களுக்கு எந்த விதமான உற்சாகமும் கொடுக்கிறதா என்றால், இல்லை. திரு. மொரார்ஜிதேசாய் அவர்கள் புதிதாக எந்த மாநிலமாவது மதுவிலக்கு அமுல்படுத்துமேயானால், அந்த மாநிலத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று சொல்லுகிறார்கள். அதற்காகவாவது, கெட்டிக்காரத்தனமாக ஒரு மூன்று மாதத்திற்கு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஆரம்பித்து மானியத்தை கொடுங்கள் என்று கேட்க வேண்டுமா என்பது எனக்குப் புரியவில்லை. இந்த அரசு பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு அண்ணாவுக்குப் பிறகு, சுசீலா நய்யார் அவர்கள் மதுவிலக்குப் பிரசாரத்திற்குத் தலைவர் என்ற வகையில் அந்த அம்மையார் எனக்கு ஒரு கடிதம் எழுதியபோது, அண்ணா அவர்கள் எவ்வளவு தீவிரமாக செய்தார்களோ அதே தீவிரமாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந் தார்கள். நான் இந்த மன்றத்தின் முன்னவன் என்ற முறையில், இந்த மன்றத்தின் மூலம் அவர்களைக் கேட்டுக்கொள்வேன், மத்திய சர்க்கார் இது போன்ற மாநிலங்கள் மதுவிலக்கு அமுல் படுத்தும்போது, நல்ல மானியங்களை வழங்க வேண்டும் என்று சுசீலா நய்யார் போன்றவர்கள் மத்திய சர்க்காரோடு போராட வேண்டும் என்று (குறுக்கீடு) புதுச்சேரியில் உங்கள் சர்க்கார்தானே இருந்தது, என்ன செய்தீர்கள்? காமராஜர் கடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், என்ன சொன்னார்கள்? புதுச்சேரியின் வருமான நிலையில் மதுவிலக்கு அமுல்படுத்துவதற்கு இல்லை என்றார்கள். புதுவையின் வருமானம் ரூ. 3 கோடி, டெல்லி கொடுக்கும்