பக்கம்:காவியக் கம்பன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 கம்பன் உறக்கத்தின் மயக்கமோ ஊட்டிய கை கழுவிலையோ உண்டது உள்நாக்கில் இனித்துக் கொண்டிருக்கிறது. மறுபடியும் ஒரு படையலோ என மறுத்தான் உரிமையோடு அவனை உண்ண அழைத்தாள் என் உதட்டு பருக்கையை உன் உடையில் துடைத்தேன் என்ருன். அவளும் திகைத்தாள் இளஞ் சிரிப்பும் வளையோசையும் கேட்டது இருவரும் வளையோசை வந்த திசையை நோக்கினர். அன்னை அழுந்துார் மாகாளி சிரித்த முகத்தோடு சிலையாக இருந்தாள் எண்ணைக் கறையும் சோற்றுப் பருக்கையும் அவள் ஆடையில் பளிச்சிட்டன. பதறின்ை. ஆற்ருமை மிகுந்து அழுது விட்டான். கம்பன் இமயத்து வேந்தன் மகளே உமையவளே சிமயத்து எழுந்த செந் தழல் கொழுந்தே கந்தனுக்கு வேல் கொடுத்த கதையும் உண்டு சம்பந்தனுக்குப் பால் கொடுத்ததைப் படித்திருக்கிறேன். பந்தம் பிடித்து பைந்தமிழ் வளர்த்தனையோ பாசத்தைச் சோருக ஊட்டினையோ அம்மா இதற்கு முன் எத்தனை பிறவி எடுத்தேனே இன்னும் எத்தனை பிறவி எடுப்பேனே ஏதும் இந்தப் பிறவிக்கு ஈடில்லை மகாசக்தி காளிக்கு நான் மைந்தன்