பக்கம்:காவியக் கம்பன்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 தேல்ை தமிழளந்த சீர்காழிப் பிள்ளையோ சிவன்துாது நடந்த செந்தமிழ்ச்சுந்தரனே பொன்வேய்ந்த சோழனுக்குப் புகழ்வேய்ந்த சேக்கிழாரோ திருவாசகம் சொன்ன மணி வாசகனே நாலாயிரம் பாடிய ஆழ்வாரில் ஒருவரோ சோழன் முன்னிலையில் செல்லாத ஒன்றுக்கு அரங்கன் சந்நிதியில் ஆகாத ஒன்றுக்கு தில்லையில் பாயிரம் பெறவந்த கம்பன் என்ன பெரிய கொம்பனே என்ருர்சிலர் மூவாயிரவர் ஒன்றுகூடி முடிவு சொல்ல கம்பனுக்கு வயது போதுமா என்ருர்சிலர் எழுத்தாணி மழுங்க, எழுதியது பெரிதல்ல எழுத்தும் சீரும் எதுகையும் மோனேயும் நான் நீ என்று முன்நின்றது. பெரிதல்ல தில்லையில் அவர் திரிந்து திரிந்து ஒய்ந்தார் கோவிந்தன் சந்நிதியில் சலித்துச் சாய்ந்தார் அன்றிரவு ஒரு தீட்சர் வீட்டுப்பிள்ளையை அரவம் தீண்டிற்று அந்தோ பரிதாபம் மருந்துகள் பலிக்கவில்லை மந்திரம் ஜெயிக்க வில்லை மாண்டதற்கு திரண்டனர் தில்லை அந்தணர் ஈமக் கடனுற்றி எரி எடுத்தார் அதுபோது துக்கம் கேட்பதற்கு கம்பரும் வந்தார் கம்பர் அனந்தனே வாசுகியோ பதஞ்சலியோ அறியேன் ஆழியான் பள்ளி கொண்ட அணையே