இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
417 என்றாலும் - தூரத்தே இருந்தவுனைத் தொட்டறிய, நின்னுடலை, ஆரத் தழுவி, மனத் தாசைக் கனல் தணிக்க நேரத்தை எதிர் நோக்கி நெடுநாள் தவமிருந்தேன். காத்திருந்த என்னாசைக் கனவும் நனவாச்சு! இன்றைக்கு - அம்மி மிதித்தேறி, அருந்ததியைக் கண்ணோக்கி, செம்மை அறம்துலக்க, திருவளர்க்க, சூலம் விளக்கச் சம்மதித்தார் என்றனுக்கே: சதியானாய்! இன்றிரவு இவ்வறையில்- நீலவொளிக் காந்தம் நின்றெரிய, மஞ்சத்தில் , பாலலைபோல் பஞ்சணையும் பம்மென்று பொம்மியெழ, சீத இளந்தென்றல் சிலுசிலுக்க, பூமணத்தின் போதை கிறுகிறுக்க, போகக் கனவெழும்ப, மாங்கனிகள், சுளைவருக்கை, மகிழ்சாந்தம், தாம்பூலம் ஆங்கொருபால் நின்வரவை ஆவலுடன் எதிர்நோக்க நானும் உடனிருந்தேன்.