இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செந்தழல் ஏந்தி நான் வருவேன்-வாழ்வில் செத்துளம் மாய்ந்து கிடந்திடும் மாந்தர் சிந்தையைக் கொதித்தெழச் செய்வேன்-அந்தத் - தீயினில் புன்மைகள் மாய்ந்திடச் செய்வேன். 5 சொற்களைக் கொண்டு நான் வருவேன்- அதைச் சூறைவெம் புயலாய் மாறிடப் புரிவேன்; கற்களும்கூட உயிர்த்தெழுந் தாடக் | 'கவிதைகள் ஆக்கித் தருவேன்; தருவேன். அறிவொளி கொண்டு நான் வருவேன்-காணும் அண்ட சராசரம் அனைத்தையும் மாந்தர் இருகரம் அதனுள் வசப்படத் தருவேன்; ஈசர்க்கு நிகராய் மனிதனைப் புரிவேன். பிறவிகள் எடுத்திடச் சனையேன் -இதைப் பிணியெனக் கருதி நான் கடவுளை அழையேன். கருவினில் வளரும் சிசுக்குலம் யாவின் கருத்திலும் புகுந்து கனலாய்ப் பிறப்பேன். (திரும்பவு