உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 குற்றத்தின் கொடும்பலனும் கண்டு கொண்டேன்! குருதிவெறி கொண்டவையும் ஓநாய்க் கூட்டம் சுற்றி நிற்கும் சபையினிலே சூதும் வாதும் சூழ்ச்சியுமே தீர்ப்பாகும் சூழ்ச்சி தன்னை மற்றவர்கள் கற்றறியும் வண்ணம், என்றன் வல்லுயிரைப் பலிகொடுப்பேன்! எனினும் இந்த ஒற் ைமுழச் சிறுகயிற்றை நம்பி, ஆட்சி - ஓச்சலெணும் வெள்ளையனே! உனக்கோர் வார்த்தை! 6 தூக்கிலிடும் முழக்கயிற்றால், சினந்து சீறும் துப்பாக்கிக் குண்டுகளால், அதிர்ந்து விம்மித் . தாக்குகின்ற பீரங்கித் தொகையால், யுத்த தந்திரத்தால், படைபலத்தால், சிறைக்கூ டத்தால், ஈக்குலம்போல் மக்கள்தமைக் கொன்றே தள்ளி எதிர்த்தாலும், சுதந்திரத்தின் வேட்கை தன்னைத் தூக்கிலிட, சிறைபிடிக்க, சுட்டுத் தள்ள, சுடுசாம்பல் ஆக்கிவிட மார்க்கம் உண்டோ ? பாளையத்தார் தமைக்கூட்டி, இங்கே என்னைப் பலிவாங்கி, அவர்க்கெல்லாம் பாடம் காட்டி, ஆளுகையை நிலைநிறுத்தத் திட்டம் தீட்டும்' அன்னியனே! மரணத்தைக் கண்டே அஞ்சும் கோழைமகன் நானல்ல! மாண்ட பின்னும் குலவையிட்டு நின்றொலிக்கும் என்றன் வீரச் ஆளுனரயைச் சரித்திரத்தி னின்றும் உம்மால் துடைத்தெடுக்க, தூர்த்துவிட வலிமை உண்டோ ? : 8"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/36&oldid=989523" இலிருந்து மீள்விக்கப்பட்டது