உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றங்கள் என்றுரைத்தாய்! எதுதான் குற்றம்? குலச்சிறப்பை, குடிப்பிறப்பை, மானம் தன்னை விற்றுமுதல் ஆக்கிவிட்டு, விதேசிக் கொள்ளை வேட்டையர்உம் காலடியில் வணங்கி வீழ்ந்து, குற்றேவல் செய்துயிரைக் காக்கும் இந்தக் கோடாலிக் காம்புகள்போல் யானும் தேசப் 3ற்றிழந்து வாழாது, பகைவர் 'நும்மைப் படைதிரட்டி எதிர்த்தேனே! அதுவா குற்றம்? கப்பமில்லை என்றுரைத்தேன். உண்மை ! எங்கள் காடுகளில் கழனிகளில் ஏரைப் பூட்டி வெப்பம் வெயில் பாராமல் உழைத்துப் பொன் ன. . விளைவித்தோர் எம்மக்கள்: அவர்தம் செல்வம் குப்பையிலே கிடந்தாலும் அயலார் நீங்கள் குன்றுமணி அளவேனும் கொள்ளப் போமோ? கப்பமெனும் பேராலே எங்கள் வாழ்வைல் காவுதர மறுத்தேனே! அதுவா குற்றம்? குற்றமெனில் ஒன்றுண்டு; ஒன்றே ஒன்று! கொள்ளையிடும் நோக்கத்தால் எங்கள் நாட்டுகள் புற்றெடுத்த கருநாகம் போலே நீங்கள் புகுந்தெமது பொன்னாட்டை வளைந்து சுற்றி, முற்றுகைகள் இட்டுவந்த மோகம் தன்னை முளைமுறித்துக் களைபறியாப் பிழையால் இந்நாள் முற்றவிட்டுத் தவிக்கின்ற குற்றம் ஒன்றே முன்னவரும் என்னவரும் புரிந்த குற்றம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/35&oldid=989524" இலிருந்து மீள்விக்கப்பட்டது