உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமப் போர்த் தளபதியே! இந்தப் பாடல் சோவியத் நாட்டின் தந்தையாக விளங்கிய லெனினைப் பற்றி அவரது பிறந்த தின வீழாவொன்றின்போது பாடிய வாழ்த்துப்பா: . ஏர்முகத்தில் பயிர் விளைத்து வையம் காக்கும் " ஏழையணரப் பீரங்கிக் கிரையாய் மாற்றிப் போர் முகத்தில் பலிகொடுக்கும் பன்மை போக்கிய , பொதுவுடைமைப் புதுவாழ்வில் தொழில்கள் எல்லாம் கார்முகில் போல் வளஞ்சுரந்து, வறுமை நீங்கி, கடவுளர்போல் மக்களெலாம் களிப்புற் றோங்கிச் சீ*மலியும் வகையுணர்த்திச் சென்ற மக்கள் சேவகனே! நின் புனித நாமம் வாழி! மாயிருனில் படுகுழியில் வீழ்ந்து, மீளும் மார்க்கத்தை அறியாத ருஷிய மக்கள் ஆயிரங்கால் பூதமெனத் திரண்டொன் ராகி "அரசு கொளும் முரசறைந்து, ஆரண் யத்துப் பேயரசாம் ஜாரரசைப் பேர்த்து, தங்கள் பேரரசை நிலைநாட்டிப் புதுமை வாழ் வின் தாயகத்தைத் தம் நாட்டில் தழைக்கச் செய்த தருமப்போர்த் தளபதியே! வாழி! வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/84&oldid=989574" இலிருந்து மீள்விக்கப்பட்டது