பக்கம்:காவியப்பரிசு.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இமயத்தின் எல்லைநமைப் பிரித்திட் டாலும் இதயத்தால் பிரியாதோம் என்றால் குற்ற தமையனைப் போல், தாதையைப்போல், பசியை ஆற்றும் தாயைப்போல் எம்மிடத்தே பழகி, தக்க சம்பத்தில் நல்லுதவி நல்கி, இன்றைச் சகவாழ்வுக் கொள்கைக்கோர் சான்ற யாகி அமைகின்ற நல்லுறவு சிறக்& அன்றே அடியெடுத்துக் கொடுத்திட்ட புரட்சி வாழி! பிற்பட்ட நாடுகளின் சுதந்திரத்தைப் பேணி நிற்கும் கவசமெனப் பெற்றாய்! வாழ்வில் முற்பட்டுச் சிறக்கவெணும் நாடு கட்கோ மந்திவந்தே உதவிசெயும் வள்ளல் ஆனாய்! அற்பத்துப் புத்தியினால் அழிவார் தம்மை அறிவுறுத்தும் சற்குருவும் ஆனால் எங்கள் கற்பகமே! வழித்துணையே! உலகோர் நாடும் கலங்கரையின் ஒளிவிளக்கே! வா! வா!