பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நின்மொழி என்செவி சேருகையில்-நெஞ்சில் நேரும் மகிழ்வினை யாதுரைப்பேன் என்னுயிர் மூச்சென ஆனவனே-எனக் கேதுக்கடா அந்த மேலுலகம் வீதி களில்விளை யாடுகையில்-என்றன் வேதனை யாவுமே ஓடிடினும் தீது புகுந்து விளைந்திடுமோ-என்று செந்தமிழேமனம் அஞ்சுகிறேன் கெட்ட மொழியினைப் பேசுவது-மிகக் கேடு தருஞ்செயல் விட்டுவிடு சிட்டு நிகர்த்திடும் என்மகனே-வரும் சின்ன மொழியையும் தள்ளிவிடு சாதி சமயங்கள் என்பவரை-நண்பாய்ச் சார்ந்து பழகுதல் தீமையடா ஒதிய சங்கத்தில் உள்ளவராம்-நம்மை ஓம்பி வளர்த்திடும் நல்லவரே