பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மறவர் நாடு D பகைவென்று புகழ்கொண்ட பழநாடு கிதம் வாழ்கவே -LFoo வாளோடு வாள் மோதும் போரென்ற மொழிகேட்டு மகிழ்வோடு தோள்வீங்கும் மாவீரர் வளர்நாடு தோளோடு வாள்வீழ்ந்து பகைமாயப் போராடும் துணிவாளர் பகைபணியிற் கனிவாளர் நிறைநாடு விழுப்புண்ணை மேலாக விழைகின்ற ஒருநாடு வேல்வரினும் இமையாத வீரமிகு தமிழ்நாடு புழுக்கூட்டம் எனப்பகையை அழித்தொழித்துப் பெயர்கின்ற புதல்வனுக்குப் பாலூட்டி வளர்த்ததிருத் தாய்நாடு