பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆவி கலந்த அழகி அவளோர் அழகி-என் ஆவி கலந்தனள் பலநாள் பழகி -அவள் குவளை அவள்கண் குளிர்தேன் பார்வை குடிக்கத் தவிக்கும் விழிக்குள் நிறைந்திடும் -அவள் குழலோ குரல்வாய் இசையால் பணியும் குயிலோ பயில மெதுவாய் அணையும் முழுவான் நிலவோ முகமோ தெரியேன் முகிலோ குழலோ எனுமா றறியேன் -அவள் பிழியா நறவோ குறையா மதியோ பி&ணயோ யாழில் பிறவா இசையோ எழுதாக் கிழியோ பொளியாச் சிலையோ எதுதான் இனையோ நிகர்தான் இலேயோ -அவள் 66