பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாடகம் ஆடுகிருன் == எடுப்பு பூமியில் நாடகம் ஆடுகிருன் - மனிதன் பொய்ம்மை வேடங்கள் போடுகிருன் - வேடம் போடும் பாணியில் பாடுகிருன் -பூமியில் முடிப்பு கல்வியில் வேடம் அரசியல் வேடம் கடவுளைக் கானுந் துறையினில் வேடம் நல்லவன் வல்லவன் போலே வேடம் நட்பிலும் பேச்சிலும் அனைத்திலும் வேடம் கால்களைப் பிடிப்பான் கைகளைப் பிடிப்பான் காரியம் முடிந்தால் கழுத்தினைப் பிடிப்பான் வாலையும் பிடிப்பான் வாழ்விலும் நடிப்பான் வந்ததைச் சுருட்டி ஒட்டம் பிடிப்பான் -பூமியில் கண்களில் நீரும் கைகளில் கும்பிடும் காட்டி நடிப்பான் உலகமும் நம்பிடும் எண்ணும் நினைப்பினில் எத்தனை வஞ்சம் இவனை நினைத்தால் நடுங்கிடும் நெஞ்சம் -பூமியில்