பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை காலைக் கதிரவன் எடுப்பு காலையில் தோன்றும் கதிரவனை - தாமரை கண்டு மலர்ந்தது பொய்கையிலே தொடுப்பு சோலைமலர்களை வண்டினம் நீவிடத் துரங்கிய மந்திகள் கிளைகளில் தாவிட முடிப்பு பள்ளிச் சிருர்கள் மனந்தெளி வடைந்து பயின்றிடும் ஒலியெழக் கன்றுபால் அருந்திடத் துள்ளித் திரிந்திட யாவரும் மகிழ்ந்திட துணையொடு தூங்குவார் மனம்மிக வருந்திட எழில்மிகு கோலம் வகைவகை வனந்திட எங்கனும் மங்கல ஒலிகள் முழங்கிட விழிமலர் அலர்ந்திடப் புத்துணர் வோங்கிட வினைஞர்கள் உழவர்கள் தந்தொழில் செய்திட

112 -காலை --காலே -காலை - காலை