பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - _ மந்தையில் மேய்ந்திடும் மாடுகள் - வந்து மாலையில் வீட்டினைக் கூடலாம் சிந்தை மேய்ந்திடப் போகுமேல் - வந்து சேரிடம் எய்திடல் ஆகுமோ? தேடும் பொருள்பழு தாகலாம் - பின்னர்த் தேடின் அதுநிறை வாகலாம் கூடும் மனம்பழு தாகுமேல் - எந்தக் கொம்பனும் மீண்டிடல் ஆகுமோ? வானம் வறண்டிடும் போதிலும் - தோண்ட வந்திடும் நீரினல் வாழலாம் மானம் வறண்டிட நேருமேல் - எந்த மாந்தனும் வாழ்ந்திட லா குமோ? செல்லும் வழிதடு மாறலாம் - மீண்டும் செல்ல நினைத்தஊர் சேரலாம் நல்ல நடைதடு மாறுமேல் - இந்த நானில மேபழி கூறுமே Ꮠ