பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசைப் பற்றி பெரியகுளம் என்ற ஊரில் சுப்பராயலு சீதாட்கலமி _iபாக்கு 7-10-1920-இல் நன்மகளுகப் பிறந்த இவர் அவ்வூரிலேயே தொடக்கக் கல்வியைக் கற்ருர். அப்பருவத திலேயே கவிதை உணர்வை ஊட்டி ஊட்டி வளர்த்தார். இவர் தம் தாய் மாமனுகிய துரைசாமி என்பார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் 1946 இல் முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஈராண்டு தமிழாசிரியராகப் பணியாற்றியபின் காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரிய ராகப் பணிபுரிந்து 1979இல் ஓய்வுபெற்றுள்ளார். 1949இல் கலைச்செல்வி என்னும் நலத்தகையாரைத் தமிழ் நெறிக் காவலர் மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் கலப்பு மணம் செய்து கொண்டார். ஆறு குழந்தைகளுக்குத் தந்தையான இவர் இனிப் பெற்றெடுக்க விரும்புவது தலைசிறந்த நாடகக் காப்பியத்தையே என்கிருர் . பாரதிதாசன் பாம்பரையில் முன்னணியில் நிற்கும் இவர்தம் கவிதைகள் 1966 இல் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றதோடு சாகித்திய அகாடமியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன. இவர்தம் வீர காவியம் 1973 இல் தமிழ் நாட்டரசின் பரிசிலைப் பெற்றுள்ளது. இனிய இயல்பும், குழந்தை மனமும், உயரிய கொள்கை யும், பிறழா உறுதியும் கொண்ட இவர்தம் கவிதைச் சிறப் பினைக் கண்டறிந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளார். பறம்பு மலையில் நடந்த பாரி விழாவில் கவியரசு' எனப் பட்டம் வழங்கிக் சிறப்புச் செய்தார். மரபு பிறழ்ந்த கவிதைகளை அறவே வெறுக்கும் இவர், தமிழே தெய்வமென வணங்குவதோடு, தமக்கு மொழியறி ஆட்டிய ஆசிரியர்களையும் தெய்வமென்றே போற்றுகின்ருர். 女 127