பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழில் பாடு ! எடுப்பு பாடுவ தென்ருல் தமிழினில் பாடு பாவையே உளமகிழ் வோடு! தொடுப்பு வாடிடும் என் மன வேத னை தீர்ந்திட வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப் Փկ ւմ ւլ வையம் பெற்றது தமிழ்மொழியாம் - அதன் வழி வழி வந்தன பிறமொழியாம் ஐயம் இல்லை உண்மையிதாம் - கண்ணே அருமைத் தமிழே நமதுயிராம் இடுக்கண் வருங்கால் சிரித்திடுவாய் - மன இழுக்கெனும் மாசுகள் துடைத்திடுவாய் வடுக்கள் நீங்கிட வாழ்ந்திடலாம் - என வள்ளுவன் சொன்னதைப் பாடிடுவாய் நன்மைகள் செய்ய முயன்றிடுவாய் - இன்றேல் நலிவுகள் செய்திட முனையாதே என்னும் மேலோர் அறவுரையை - நல்ல எழிலொடு காதலை வீரமதைப் X 12 -பாடு -பாடு