பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தாயைப் பழித்துரைத்தால்--நெஞ்சம் தாங்கிட ஒப்பவில்லை நாயவன் என்றுமிழ-உணர்வு நாடிப் பெருகுதம்மா! காயைக் கவர்ந்திடுவார்-தல்ல கணிச்சுவை தானுணரார் மாயச் சுமையுடலை-ஒம்பிட மானம் விலைபகர்வார் தோள்வலி மிக்கமையால்-எம்மைத் துாற்றினர் வட வேந்தர் வாள்வலி யாலவரை-வீழ்த்தி வாழ்ந்ததும் இந்த இனம் மாள்வது கண்டபினும்-பேதை மாந்தரும் துஞ்சுகின்ருர்! ஆள்வதும் எம்மொழியோ?-இங்கே ஆண்மையும் செத்ததுவோ? ! r தனி. 18