பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ----- உன்னைப் பெறு வதற்கே - இங்குநான் ஓடித் திரி வதெல்லாம் என்னைப் புறக் கணித்தால் - உயிரை எப்படி நான் சுமப்பேன் உன்னெழிற் கா தலன்ருே - என்னை உன்மத் தனக் குதடி கன்னற் சுவை மொழியே - என்னைக் கட்டி யணைத் திடடி செல்வம் உற வரினும் - வறுமை சேர்ந்து துயர் தரினும் பல்வகை இன் னலிலும் - என்மனப் பாவையே நான் பிரியேன் நல்வழி காட் டிடடி - உன்றன் நட்பொன்று போ துமடி சொல்வது சொல் லிவிட்டேன் - பிறகு தோழியுன் சித் தமடி நாட்டவர்க் கஞ் சுதியோ? - உலகில் நம்மைத் தடுப் பவர்யார்? காட்டுப் புலி யடிநான் - போரில் காத்திடு வேன் உனையே வாட்டம் தவிர்ந் திடடி - கொடிய வாளுக்கும் அஞ் சுகிலேன் கோட்டை மதி லகத்தோர் - முழக்கும் கொட்டுக்கும் அஞ் சுகிலேன் 35 காவியப் பாவை